உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ஈரோடு:ஈரோடு மாவட்டம், ஆசனுார் பஞ்., அரேபாளையம், சீஹட்டியைச் சேர்ந்தவர், ஆனந்தன். வாரிசு சான்றிதழ் பெற, ஆசனுார் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். சான்றிதழ் வழங்க, 60,000 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என, வி.ஏ.ஓ., ருத்ரசெல்வன், 36, கேட்டதாகக் கூறப்படுகிறது.இறுதியில், 50,000 ரூபாய் தர பேரம் பேசி, 5,000 ரூபாய் முதற்கட்டமாக கொடுத்துள்ளார். மீதி பணத்தை, 10ம் தேதி தருவதாக ஆனந்தன் தெரிவித்தார்.ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறையில், ஆனந்தன் புகார் செய்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ., விடம் நேற்று கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ.,வை கையும் களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை