உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார்.இதுபற்றிய விவரம் வருமாறு; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 40. இவர் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி நகரில் வி.ஏ.ஓ வாக பணியாற்றி வந்தார்.அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வி.ஏ.ஓ., கேட்டுள்ளார். முதல்கட்டமாக 3 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் மேலும் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்ய முடியும் என பிரபு கூறி விட்டார்.வேதனையடைந்த கணேசன் மேலும் பணம் தர விருப்பமில்லாமல் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர்.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பிரபு லஞ்சப்பணத்தை வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.பணியின் போது மது போதையில் இருந்ததால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரபு, மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

mdg mdg
ஜூன் 22, 2025 16:16

சங்ககெட்ட சங்கம் ஒன்னு இருக்கு இந்த ரகசிய திருடர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்க


chinnamanibalan
ஜூன் 22, 2025 11:24

லஞ்சம் வாங்குவது குற்றமாக கருதப்பட்ட நிலை மாறி, லஞ்சத்தை கேட்டு பெறுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதிலும் திராவிட மாடல் ஆட்சியில், லஞ்சம் கீழ் மட்டத்தில் பெறப்பட்டு மேல் மட்டம் வரை பங்கு அளிக்கப்படுகிறது.


BALA MURUGAN K
ஜூன் 22, 2025 21:55

எல்லா ஆட்சியிலும் இப்படி தான்....இவரை மட்டும் சொல்ல கூடாது.....அரசியல் கட்சிகள் தான் வேறு....அரசு பணியாளர்கள் ஒன்றே தான்....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 21, 2025 21:18

நான் கடந்த 40 ஆண்டுகளில் 4 வீடுகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாங்கி, விற்றுள்ளேன். இப்போது இருப்பது ஒன்றுதான். ஒவ்வொருமுறை வாங்கும்போதும் பத்திரப்பதிவு, பட்டா விற்கு காசு கொடுக்காமல் வேலை நடந்ததில்லை. தமிழகம் இந்த புதைகுழியில் இருந்து மீள்வது ரொம்ப கஷ்டம்.


Anantharaman Srinivasan
ஜூன் 21, 2025 20:58

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வி ஏ ஓ மதுரை வி ஏ ஓ விடம் training எடுத்தால் லட்சத்தில் வாங்கி குவிக்கலாம்.


Ramesh Sargam
ஜூன் 21, 2025 20:13

இதற்கு பேசாம தெரு ஓரமா பிச்சை எடுத்து வயிற்றை நிரப்பலாம்.


Anantharaman Srinivasan
ஜூன் 21, 2025 23:33

நான் அரசு அதிகாரி. பிச்சையெடுப்பபது எனக்கு கேவலம். லஞ்சம் வாங்கினால் அந்தஸ்திலிருக்கும் எனக்கு மந்திரி சப்போர்ட் இருக்கும் என நினைப்பர் என நினைத்து மாட்டிக்கொண்டேன்.


புதிய வீடியோ