உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!

ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!

விருதுநகர்: விவசாய நிலத்தை அளந்து தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., இப்ராஹிம், உதவியாளர் சிங்காரம் ஆகிய இரண்டு பேரை லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,வாக இப்ராஹிம்,54, பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வதுவார்பட்டியை சேர்ந்த சின்னதம்பி, 34, என்பவர் விவசாய நிலத்தை அளந்து தர கோரி அணுகி உள்ளார். இதற்கு, வி.ஏ.ஓ., இப்ராஹிம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்கம் விரும்பாத, சின்னதம்பி லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய பணத்தை, வி.ஏ.ஓ., இப்ராஹிமிடம், சின்னதம்பி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால், லஞ்சப்பணத்தை உதவியாளரிடம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளார்.இதையடுத்து, உதவியாளர் சிங்காரத்திடம் சின்னத்தம்பி லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இப்ராஹிம், சிங்காரம் ஆகிய இருவரை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சிந்தனை
ஏப் 22, 2025 21:20

பாவம் ஆயிரம் விஏஓகள் லஞ்சம் வாங்கும்போது இந்த ஒரு அப்பாவி நல்ல மனுஷன் போய் மாட்டிக்கிட்டார்


rama adhavan
ஏப் 22, 2025 19:49

நில அளவை இப்போது சுலபம். நவீன முறைகள் உள்ளன. தனி நபர் சர்வேர்கள் நில எடுப்புக்கு பணியாற்றுகின்றனர். உ. ம். சென்னை மெட்ரோ ரயில். எனவே இப்பணியை தேர்ச்சி பெற்ற தனி நபர் சர்வேயர் வசம் வழங்கி ஆன்லைன்னில் பதிவேற்றம் செய்து அரசு முத்திரையுடன் சான்றிதழ் வழங்கலாம். லஞ்சமும் குறையும்.


தாமரை மலர்கிறது
ஏப் 22, 2025 19:29

கோட்டாவில் ஜொலிக்கும் திராவிட மணிக்கொழுந்து


என்றும் இந்தியன்
ஏப் 22, 2025 17:58

ரூ.5 ஆயிரம் லஞ்சம் கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ. ஏன்? இவ்வளவு குறைவாக அவர் லஞ்சம் வாங்கியதால். அவர் தகுதி என்ன??? இவ்வளவு குறைவாக அவர் வாங்கியது லஞ்ச சட்டப்படி தவறு என்று உணர்த்தத்தான்.


என்றும் இந்தியன்
ஏப் 22, 2025 17:54

ரூ 5000 கோடி லஞ்சம் ஆனால் ஒரு ஆக்ஷனும் இல்லை. ஆனால் ரூ 5000 லஞ்சம் கைது. ஆகவே தயவு செய்து இந்த மாதிரி சின்ன லெவெலில் வாங்கவேண்டாம். லஞ்சம் வாங்கும் எல்லோரும் கூட்டாக சேர்ந்து ஒரு cooperative store ஆரம்பிக்கவும். அதில் இந்த லஞ்சம் அங்கு சேர்ப்பிக்கவும் அங்கிருந்து பங்கு வாங்கிக்கொள்க.


Srinivasan Ramabhadran
ஏப் 22, 2025 16:53

சின்ன மீன் பிடிக்கிறார்கள். விலாங்கு மீன்கள் எப்பொழுதும் தப்பித்து விடுகின்றன. இன்னும் நகரங்களில் பட்டா பெறுவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள். நீங்கள் ஆன்லைனில் மனு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சம்பந்த பட்ட நபரை "நேரில் சென்று" பார்த்தால் தான் உங்கள் வேலை முடியும்.


HoneyBee
ஏப் 22, 2025 16:51

ஆயிரம் கோடி சாதிக் பாட்ஷா வெளியே வந்தார்...‌ எங்கடா இருக்கு சமநீதி


M S RAGHUNATHAN
ஏப் 22, 2025 16:24

அந்த VAO அவர்களுக்கு ஷரியா சட்டப்படி தண்டனை கொடுக்கலாமா? திரு ஜவருல்லா அவரை கேட்கவும் . ஆனால் அவர் வாய் திறக்க மாட்டார். ஏனெனில் அவரே ஒரு வழக்கில் தண்டனை பெற்று இருக்கிறார்.


M S RAGHUNATHAN
ஏப் 22, 2025 16:21

தினமலரில் இன்றைய pocso வழக்குகள் என்பது போல் தனியாக இன்று லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் என்று தனி பக்கம்,/ column ஒதுக்கவும்.


Padmasridharan
ஏப் 22, 2025 15:22

லஞ்சம் கொடுக்க"ம்" விரும்பாத, சின்னதம்பி.. இதை கவனிக்கவும் அய்யா.. ஒரு எழுத்து "கொடுக்க" பட்டிருக்கே


சமீபத்திய செய்தி