உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தை அளந்து தருவதற்கு ரூ.2 ஆயிரம்: லஞ்சப் பணத்துடன் சிக்கினார் வி.ஏ.ஓ.,!

நிலத்தை அளந்து தருவதற்கு ரூ.2 ஆயிரம்: லஞ்சப் பணத்துடன் சிக்கினார் வி.ஏ.ஓ.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலூர்: அரியலுார் மாவட்டத்தில், நிலத்தை அளந்து தருவதற்காக, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.அரியலுார் மாவட்டத்தில், வங்குடி கிராம நிர்வாக அலுவலராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரிடம் அய்யப்பன் நாயக்கன்பேட்டைகிராமத்தை சேர்ந்த வேல்முருகன், தனது நிலத்தை அளவை செய்ய நாடி உள்ளார்.அப்போது புகழேந்தி ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து புகழேந்தி மீது வேல்முருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புகழேந்தியிடம் வேல்முருகன் கொடுத்தார்.மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kalaiarasan
ஜன 29, 2025 18:38

எல்லா ஊரிலும் இதே பிரச்சனை


சி எம் ஆர்
ஜன 29, 2025 15:26

லஞ்சம் வாங்கியவர்கள் வரிசையாக போட்டோவுடன் தினமலர் பேப்பரில் வெளியானது எவனுக்கு தண்டனை கொடுத்தார்கள்


D.Ambujavalli
ஜன 29, 2025 06:39

எல்லாத்துறையிலும் tariff படி லஞ்சம் வாங்கத்தான் செய்கிறார்கள் எந்த அரசு வந்தாலு எதுவும் செய்வதில்லை பெரிய தலைகள் கொஞ்சத்தை ‘தள்ளி’ தப்பித்துக்கொள்ளும் ‘ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா, கொண்டுவந்து காட்டு இங்கே கொண்டா’ என்றுதான் பாட வேண்டும்


Muruganandam
ஜன 29, 2025 05:06

1000,2000 வாங்குகிற சாதாரண அலுவலர்களைதான் இந்த லஞ்ச ஒழிப்புதுறைக்கு தெரியும். தங்களின் வீரத்தையும் நேர்மையையும் காட்டுவார்கள். சில நூறு லட்சங்கள் லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள், பொதுபணிதுறை என்ஜினியர்கள் , RTO அதிகாரிகள், பத்திர பதிவு துறையில் இருக்கும் திமிங்கலங்கள், இவர்களின் பக்கம் போவது கிடையாது


அப்பாவி
ஜன 28, 2025 22:34

ராஜ முழி...


சின்ன சுடலை ஈர வெங்காயம்
ஜன 28, 2025 22:12

அட போங்கப்பா. எங்க மேல் கைவைக்க முடியாது.


Nandakumar Naidu.
ஜன 28, 2025 21:56

மன்னன் எவ்வழியோ, அதிகாரிகள், தொண்டர்கள் மற்றும் மக்கள் அவ்வழி. ஊழலலோ ஊழல்.


srinivasan
ஜன 28, 2025 21:13

இவர் கத்து குட்டி போல…. மாட்டிக்கிட்டார்


Ramesh Sargam
ஜன 28, 2025 21:03

மீண்டும் மீண்டும் இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிறிய சிறிய மீன்களே சிக்குகின்றன. பெரிய பெரிய மீன்கள் பிடிபடுவதில்லை. காரணம் என்னவாக இருக்கும்?


Ratan Kan
ஜன 28, 2025 22:11

ஜெயலலிதா லாலு மல்லையா போன்ற திமிங்கலங்களும் மாட்டி இருக்கின்றன. சிறிதோ பெரிதோ லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு மீனும் மாட்டட்டும்.


Barakat Ali
ஜன 29, 2025 17:05

இவர் பட்டியலிட்ட பெரிய மீன்களில் ஒரு ராட்சத மீன் விடுபட்டுவிட்டது .... அது எந்த வலையிலும் சிக்கியதில்லை .... சிக்காமலேயே 2018 ஆகஸ்ட்டில் போய்ச்சேர்ந்து விட்டது .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 28, 2025 20:44

சோறு தண்ணியில்லாம பணம் மட்டுமே உள்ள அறையில் அடைச்சு வெளியில் பூட்டி வையுங்க ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை