ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்கிறார் வாசன்
சென்னை: த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அரசு சார்பில், ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்ல உள்ளார். சென்னை, பல்லா வரத்தில், வரும் 25ம் தேதி, த.மா.கா., பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், 1,250 பேர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மத்திய அரசை பாராட்டியும், மாநில அரசை கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்தை முடித்து விட்டு, அன்று இரவு வாசன் டில்லி செல்கிறார். மறுநாள் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேசுகிறார். வரும் 27ம் தேதி, மத்திய அரசின் சார்பில், ஐ.நா., சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேச இந்தியாவிலிருந்து எம்.பி.,க்கள் குழு அமெரிக்கா செல்கிறது. இக்குழுவில் வாசனும் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு, நவ., 2ம் தேதி தாயகம் திரும்புகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.