உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்கிறது விஜய் மீது வி.சி.க., தாக்குதல்!

தொடர்கிறது விஜய் மீது வி.சி.க., தாக்குதல்!

சென்னை: நேற்று வந்த கூத்தாடி என்று த.வெ.க., தலைவர் விஜயை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.வும்., துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா பற்றிய பேச்சுகள் ஓயவில்லை. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார். விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், இதற்கு தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தமே காரணம் என்று பேசினார். நடிகர் விஜய்யின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் இடையே கடும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. மேடையில் ஒரு பக்கம் விஜய் பேசி முடிக்க, அதே நேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், நடிகர் விஜய்யின் பேச்சை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது; களத்தில் இருந்து சுயம்புவாக எழுந்த ஒரு தலைவரை, சுயமாக முடிவு எடுக்கக்கூடிய திறனும், அறிவும் பெற்ற ஒரு தலைவரை எழுத்தாலும், பேச்சாலும், அறிவார்ந்த வெளிப்பாட்டாலும் முதிர்ச்சியாலும் பண்பாக அரசியல் களத்தில் உயர்ந்து நிற்கக் கூடிய ஒரு தலைவரை கூட்டணிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி கிடப்பவர், முடிவெடுக்கத் தெரியாதவர் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை விஜய் ஏற்படுத்தியிருப்பது அபத்தமானது அவலமான பேச்சு. கண்டிக்கத்தக்க பேச்சு. திருமாவளவன் குறித்து கருணாநிதி அப்படி சொன்னதில்லை; ஜெயலலிதா அப்படி சொன்னதில்லை; இன்றைக்கு இருக்கக்கூடிய முதல்வர் அப்படி சொன்னதில்லை. அவர்களுக்கு முரணான கருத்துக்களை வைத்த போதும் கூட அது அவர்களின் கட்சியின் கொள்கை அவர் பேசுகிறார் என்று தான் இப்பொழுது கூட முதல்வர் சொல்வார். கருணாநிதியுடன் எத்தனையோ விஷயங்களில் திருமாவளவன் முரண்பட்டிருக்கிறார். ஒருபோதும் அவருடைய ஆளுமையை சிதைத்து அவர் பேசியது கிடையாது. திருமாவளவன் நமது கூட்டணியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எங்கிருந்தாலும் அவர் வாழ்க, நல்ல தலைவர் என ஜெயலலிதா வாழ்த்தி உள்ளார். இதுதான் திருமாவளவன் அவருடன் அரசியல் செய்த தலைவர்களிடமிருந்து பெற்றுள்ள சான்றிதழ். யார் இந்த விஜய் எங்கள் தலைவரை இப்படி கொச்சைப்படுத்துவதற்கு? தி.மு.க., கட்டுப்பாட்டில் எங்கள் தலைவர் இருக்கிறார் என்று எப்படி அவர் பேசலாம்? எங்களுடைய தலைவர் முடிவெடுக்கக் கூடிய தலைவர், அறிவார்ந்த தலைவர் என்பது உலகத்துக்கே தெரியும். 35 வருடமாக பத்திரிகையாளர்கள் அவரைப் பார்த்து வருகிறார்கள். அவர் எழுதி வைத்து படித்தார் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்க. நேற்று வந்த இந்த கூத்தாடி இப்படி பேசலாமா? இதை அனுமதிக்க முடியுமா? தி.மு.க.,வின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று விஜய் எப்படி பேசலாம்? விஜய் யார்? என்று ஆவேசமாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Narasimhan
டிச 07, 2024 12:33

இவன் ஒரு திமுக கொத்தடிமை. பேசாமல் திமுகவில் சேர்ந்துவிடவேண்டியதுதானே


vijai
டிச 07, 2024 11:41

பாய் விஜய் கூத்தாடி அப்ப உதயாநிதி யாரு தைரியம் இருந்தால் உதயநிதி விமர்சித்து பாரு உங்க தலைவரைதஇவ்வுலகத்துக்கே தெரியும்னு சொல்லி இருக்கீங்க ஜப்பான்ல தெரியுமா இவரை நாகரீகமா பேச கத்துங்க


Senthil
டிச 19, 2024 16:57

உதயநிதி கூத்தாடியா? தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பகுதியினர் படிப்பறிவில்லாத பகுத்தறிவில்லாத பாமர முட்டாள்கள். அவர்களிடம் அறிமுகமாவதற்கு எளிதான வழி சினிமாதான், அதனால்தான் அவர் சினிமாவில் நடித்திருப்பார் என கருதுகிறேன். மற்றபடி அவர் சினிமாவை தொழிலாக ஏற்றுக்கொண்டவர் இல்லை. ஆனால் விஜய் தொழில்முறை கூத்தாடி, அவருக்கு பிழைப்பே சினிமாதான். சினிமாவில் இல்லாதிருந்தால் அவர் இந்நேரம் டெலிவரி பாயாக இருந்திருப்பார் என நினைக்கிறேன், அந்த வேலைதான் எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் எளிதாக கிடைக்கும், செய்யலாம். ஆனால் உதயநிதி அரசியலில் திளைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அதனால்தான் தகுதியை மீறிய உயரத்தில் உட்கார வைக்கப்படுகிறார், அவர் கொடுத்துவைத்தவர், அவ்வளவுதான். ஒவ்வொருத்தரும் தனது சொத்தை தங்கள் வாரிசுகளுக்கு கொடுப்பதுபோல் கருணாநிதி குடும்பம் திமுக என்ற அவர்களது சொத்தை தங்கள் குடும்ப வாரிசுகளுக்குக் கொடுக்கிறார்கள். இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலை உருவாக்கப்பட்டால் மட்டுமே நடக்கும், பகுத்தறிவை சோதிப்பது கஷ்டம் என்பதால், குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பையாவது கல்லூரிக்குச் சென்று படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை கொடுத்தால் இது போன்ற அவலங்களை களைய முயற்சிக்கலாம். அதுவரை இது தொடரும். அடுத்து உதயநிதியின் மகன் தயாராகிக் கொண்டிருக்கிறார். அறிவிலிகளான பாமர முட்டாள்களே தேர்தல் முடிவுகளை தீர்மாணிக்கிறார்கள் என்பதால்தான் எந்த தகுதியுமே இல்லாத தற்குறியான சினிமா கூத்தாடி விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார், தேர்தலில் போட்டியிடுவேன், முதலமைச்சர் அவேன் என்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பதை தவிர வேறு வழியில்லை.


angbu ganesh
டிச 07, 2024 11:40

எனக்கொண்ணு புரியல இவன் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வரென்றான், ஆனா கூட்டணி வைக்க ஆசை ஆடறது ஊழல்தான் தொழிலேன்னு இருக்கறவன் கூட, விஜய் ஒரு பி டீம்னா இது யாரை குழப்ப


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 18:45

யோசிப்பது சாதாரண மன ஆரோக்கியம் உள்ள அனைவராலும் இயலும் ..... சரியாக யோசிப்பது .... இதை இரண்டு சதவிகிதம் பேர்தான் செய்கிறார்களாம் ....


JANA VEL
டிச 07, 2024 11:16

விஜய் நேத்து வந்த கூத்தாடி ... சரி ... அப்புடியே உதயநிதி அண்ணாவை திட்டறீங்க பாய்


Barakat Ali
டிச 07, 2024 11:14

ஒரே ஒரு க்ளூ தர்றேன் ..... இப்படி விசிக தவெக மோதிக்கிட்டா என்ன விளைவு வரும், இதனால் யாருக்கு ஆதாயம் ன்னு பொறுமையா யோசியுங்க ..... இக்கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கும் தெரியவரும் .... அவ்ளோதாங்க தமிழக அரசியல் .....


BalaG
டிச 07, 2024 11:03

நீ அவ்வளவு நாகரீகமான ஆளுன்னா, நீ நாகரீகமா பேசு முதல்ல. ஒரு அம்மா தெளிவா சொல்லிச்சே, பசங்களை எல்லாம் தப்பு தப்பா வழி நடத்திட்டு, அரை மண்டையா திரிய விட்டுட்டு, மற்ற ஜாதி பொண்ணுங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணுனு தப்பு தப்பா வழி நடத்துறன்னு. இதல்லாம் விட பெருசா ஒன்னும் அவர் செய்யலையே. அப்போ அதுக்கு உங்களை சார்ந்தவங்க யாருமே பதில் சொல்லலியே


sankaranarayanan
டிச 07, 2024 10:33

ஆத்தாடி இது என்னது - கூத்தாடி என்று இப்படி பேசலாமா? ஒருவரை ஒருவர் நாகரிகமாக பேச வேண்டாமா இப்போது திராவிட நாட்டில் காமராசருக்குப்பின் உள்ள எல்லா பெருந்தலைவர்களும் ஒரு காலத்தில் கூத்தாடிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள் சிலர் சினிமாவிலும் இன்னும் சிலர் சீரியல்களிலேயும் நடித்துவிட்டுத்தானய்யா அரசியல் மேடைக்கு வந்துள்ளனர் இதில் விஜய் மட்டும் என்ன விதி விலக்கா இவர்கள் செய்யாததையா விஜய் செய்து விட்டார் பொதுவாகவே எல்லோரையும் அரசியல் கூத்தாடி என்று சொல்லி இருப்பாரோ தெரியவில்லையே


சம்பா
டிச 07, 2024 10:23

அவன் திரைல நடிக்கரான், நீ திரைமறைவுல


முக்கிய வீடியோ