உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலம்பெயர் தொழிலாளி மீதான தாக்குதல் சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவு; சொல்கிறார் திருமாவளவன்

புலம்பெயர் தொழிலாளி மீதான தாக்குதல் சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவு; சொல்கிறார் திருமாவளவன்

சென்னை: புலம்பெயர் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக வி.சி.க, தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை; ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்'என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Prasath
டிச 31, 2025 22:42

என்னடா இது திருமாவிற்கு திடீர்னு ரோஷம் பொத்துக்கிட்டு வந்துடிச்சி வேற யாரவது அதிக சீட் தரேன்னு சொல்லிட்டாங்களா? இல்லை சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிட ஆரமிச்சிட்டாரா?


Haja Kuthubdeen
டிச 31, 2025 22:24

அது நேத்துப்பா.. இன்னைக்கு போலீசையே துரத்தி இருக்காய்ங்க புள்ளிகள்....


தாமரை மலர்கிறது
டிச 31, 2025 22:22

திருமாவின் கண்டனம் வரவேற்க தக்கது. அப்படியே பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வருவது நல்லது.


Sri Kumaran kvp cbe
டிச 31, 2025 21:16

கிடைக்குற 2சிட்டுக்கும் அப்பு அடிச்சுடார்


ஜெய் kvp cbe
டிச 31, 2025 21:15

அடடே வி வி சி க கூட ரோசம் இருக்கே


Sun
டிச 31, 2025 20:40

தமிழகமே அழுதது என்றால் தமிழக மக்கள் எல்லோரும் அழுதனர் எனப் பொருள். தமிழகத்திற்கு தலை குனிவு என்றால் தமிழக மக்களுக்கு தலைகுனிவு எனப் பொருள். இந்த சம்பவம் ஒன்றும் தமிழகத்திற்கு தலை குனிவு இல்லை. இது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசுக்கும் அதற்கு துணையாக எப்போதும் ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கும்தான் தலை குனிவு.


Murugesan
டிச 31, 2025 20:11

தமிழகத்தின் சாபக்கேடு உங்க கூட்டணி கட்சிகள் தான் இந்த ஐநாது வருடத்தில் தமிழகத்தை சீரழித்த கொள்ளைக்கார அயோக்கியர்கள்


Chandru
டிச 31, 2025 19:44

தமிழத்தின் சில கட்சிகளே இந்த மாநிலத்திற்கு தலைகுனிவு .


பெரிய ராசு
டிச 31, 2025 19:30

வி சீ க பண்ணாத அட்டுழியமா வளவரே ..போங்க போங்க போயி தோக்கறது இப்படிக்கு எழுதிவச்சுட்டு பைபிள் படிங்க ...


பேசும் தமிழன்
டிச 31, 2025 18:56

திமுக கூட்டணி தோல்வி அடையும் என்ற செய்தி வந்ததால்.... சுருதி மாறுவது போல் தெரிகிறது.... அதனால் தான் தமிழகம் தலை குனியாது என்று கூறி வந்தவர்.... தமிழகம் தலை குனிந்து விட்டது என்று கூறுகிறார்..... கான் கிராஸ் கட்சி கட்சியுடன் இணைந்து நடிகர் கட்சியுடன் கூட்டணி சேருவார் போல் தெரிகிறது.


Haja Kuthubdeen
டிச 31, 2025 22:26

அண்ணன் நாளைக்கே வேறமாதிரி சொல்வார்..பாருங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை