உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை

வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதம்பரம்: ''வி.சிக ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும்” என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின், வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய இந்த அரசு மறுபடியும் மலரக்கூடிய அணியாக அமையும். அதற்கு விடுதலை சிறுத்தை கட்சி உற்ற துணையாக தமிழகம் தழுவிய அளவில் இருக்கும். தி.மு.க.,விற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு வாக்கு விடுதலை சிறுத்தை கட்சி ஓட்டாக இருக்கும்.

25 ஓட்டுகள்

100 ஓட்டுகளில் 25 ஓட்டுகள் விடுதலை சிறுத்தை கட்சியின் ஓட்டுகளாக இருக்கும். ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கொத்து கொத்தாக விழும் என்கிற அளவிற்கு நாங்கள் களப்பணி ஆற்றுவோம். கைகோர்த்து நிற்கிறோம். களத்தில் நிற்கிறோம் என்பதற்கு இதுதான் முதன்மை காரணம். மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துகிற அரசாக மக்களை வீடு தேடி சந்திக்கிற ஒரு அரசாக, அவர்களின் குறைகளை கேட்டு 45 நாட்களில் தீர்வு காண்போம் என்று உறுதி அளிக்கிற ஒரு அரசாக, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி காட்டி இருக்கிற அரசாக, தி.மு.க., அரசு விளங்குகிறது.

தோழமைக் கட்சிகள்

அதிலும் நமது முதல்வர் மிகச்சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். கருணாநிதியை விட, முதல்வர் ஸ்டாலின் சொல்லக்கூடிய வகையில் இன்றைக்கு தோழமைக் கட்சிகளை எல்லாம் வெற்றிகரமாக ஒன்றிணைத்து வழி நடத்தி வருகிறார். கருணாநிதியை விட என்று சொன்னால் அவரை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அவரால் உருவாக்கப் பெற்ற முதல்வர் எவ்வளவு வலிமையோடு இருக்கிறார், ஆற்றல் மிக்கவராக இருக்கிறார்.

தி.மு.க., ஆட்சி

நிர்வாகத்திலும் கெட்டிக்காரராக இருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் சான்று. பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி முன்மாதிரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு என்றைக்கும் நாம் உற்ற துணையாக இருப்போம். மீண்டும் தி.மு.க., ஆட்சியே தமிழகத்தில் அமையும். திராவிட மாடல் அரசு அமையும். அவர் இன்னும் என்னென்ன நல்ல திட்டங்களை எல்லாம் மனதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் எப்படிப்பட்ட ஆட்சி நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.இளையபெருமான் சிலை இன்னும் அழகாக வரவேண்டும் மாற்றி அமையுங்கள் என பொதுப்பணித்துறை அமைச்சருக்கு முதல்வருக்கு உத்தரவிட்டார்.

ஓரணியில் தமிழகம்

தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வருக்கு நாம் உற்ற துணையாக இருக்கிறோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஓரணியில் தமிழகம். அதுதான் தி.மு.க., அணியில் தமிழகம். மற்றவர்கள் எல்லாம் கட்சிகளாக இருப்பார்கள். ஆனால் இந்த அணி ஒட்டுமொத்த மக்களும் திரளுகிற ஒரு அணியாக, தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாக, திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய இந்த அரசு மறுபடியும் மலரக்கூடிய ஒரு அணியாக அமையும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Tamilnews
ஜூலை 16, 2025 01:48

அப்போ ஒரு ஐம்பது தொகுதிகளாவது கேட்க வேண்டியது தான் திருமா ... அது சரி அப்போ மத்த கட்சிகள் , மதிமுக , கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் , மநீம , இன்னும் சில்லறை கட்சிகள் எல்லாம் வேஸ்ட் பார்ட்டியா திமுகவில் ?


HoneyBee
ஜூலை 15, 2025 21:02

அடிமை இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும் ‌...இந்த அறிவாலய அடிமைகளை அடித்து விரட்ட வேண்டும்...


Ramesh Sargam
ஜூலை 15, 2025 19:53

ஒரு நூறு அல்லது இருநூறு ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு இந்த ஆளு செய்யும் அலப்பறை இருக்கே, அப்பப்பா தாங்கமுடியல ...


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:34

ஆதவ் அர்ஜுனனை வைத்து திருமா பண்ணிய ரகளையால் திமுகவினர் மிகுந்த காண்டில் உள்ளார்கள். திருமா ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. திமுகவினர் ஒட்டு போடமாட்டார்கள். ஒழுங்காக பிஜேபி அணிக்கு தாவுவது நல்லது.


sridhar
ஜூலை 15, 2025 22:18

ஏன் சார் உங்க சிந்தனை இப்படி போகுது . அந்த கருமம் வந்தா எதிர் கூட்டணி உருப்படாது.


MARAN
ஜூலை 15, 2025 18:55

ஒரு குவாட்டர் , 200 RS PLUS ஒரு பிரியாணி , சிறுத்த குட்டி , விலைபோகும் , அவ்ளோதான் CAPACITY


சங்கி
ஜூலை 15, 2025 19:23

பிளாஸ்டிக் சேர்


M Ramachandran
ஜூலை 15, 2025 17:02

கைம்பெண் கதை தான் திருமாவுக்கு. உன்னை இனிமேலும் மக்களும் தொண்டர்களும் மன்னிக்கமாட்டார்கள். மூட்டையை பெற்று கொண்டு தவறாகா வழி நடத்தும் திருமா.


M Ramachandran
ஜூலை 15, 2025 16:57

சுயநல தலைவர்களால் காட்சி தொண்டர்கள் குமுறுகிறார்கள்.


panneer selvam
ஜூலை 15, 2025 16:37

So Thirum ji claims that his party share in DMK alliance is 25% . Do not give shock to Dravidian ruling from Arivalayam


Sundar R
ஜூலை 15, 2025 16:33

உடைந்து போய் இரண்டு துண்டுகளாக கிடக்கும் பாமகவின் ஒரு சிறிய சிங்கிள் துண்டையே பார்த்து பயந்து நடுங்கும் திருமாவை, மிகவும் தைரியமான இந்தியாவின் இரும்பு மனிதராக நினைத்து, இந்த திருமாவின் பின்னால் பயந்து ஒளிந்து நிற்கும் உள்ளூர் கம்யூனிஸ்ட்களின் நிலையை என்னவென்று சொல்வது? 80 சதமானம் ஹிந்து ஊழியர்களை தன்னகத்தே கொண்டுள்ள வலுவான கம்யூனிஸ்டுகள், டெல்லி பொலிட்பீரோவிடம் எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வது தானே முறை. கம்யூனிஸ்டுகள் ஏன் அவர்களின் நண்பர்களான பாஜகவுடன் ஒன்று கூடி சௌகரியமாக இருப்பதை விட்டுவிட்டு ஏன் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அருகில் நடுத்தெருவில் சண்டை போடுகிறார்கள்? கம்யூனிஸ்ட்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைவது தான் தமிழகத்தின் அவசியத் தேவை.


krishna
ஜூலை 15, 2025 16:24

SUPER GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI. EPPADI IRUNDHAALUM UDANJA PLASTIC CHAIR MATTUME.IDHELLAM ORU KATCHI.IDHUKKU THONDARGAL THALAIVAR.VEKKA KEDU