வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யார் வேதாளம் என்பது அக்டோபர் 9க்கு பிறகு தெரியும்..
நான்கு மாத கால த.வெ-.க., ஆட்சியில் மின் கட்டணம் அதிகமாகி இருக்கிறது; அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ந்துள்ளார்; ஆனால், அறிவு வளர்ந்திருக்கிறதா, இல்லையா என்பதை, நான் சொல்லத் தேவையில்லை. 'ஆல மரமாக இருந்த தி.மு.க., இப்போது முருங்கை மரமாகி விட்டது' என, ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். வேதாளத்திற்கு முருங்கை மரம் தான் ஏறத் தெரியும். ஆனால், தி.மு.க.,வுக்கு ஆலமரம் குறித்த எண்ணம் தான் இருக்கும். தி.மு.க., 75 ஆண்டு கால கட்சி. அக்கட்சியை 'பேக்' பண்ணி விட்டதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். ஆனால், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க.,வுக்கு வேட்பாளர் இல்லை; அ.தி.மு.க.,விலிருந்து வேட்பாளரை விலைக்கு வாங்கியுள்ளனர். மதுராந்தம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் என் வெற்றி, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். - பரந்தாமன், சட்டப்பிரிவு இணை செயலர், தி.மு.க.,
யார் வேதாளம் என்பது அக்டோபர் 9க்கு பிறகு தெரியும்..