உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் திருவுருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம், 2023ம் ஆண்டு டில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஊர்தியில் வேலுநாச்சியாரின் திருவுருவச்சிலை எனத் தொடர்ந்து அவரது புகழ்பாடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி, ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன்.மண், மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும், அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saran
செப் 20, 2025 00:30

Again e ????? These dirty politicians will never allow the people to think without the religion or e…do some thing better for the society.


Saran
செப் 20, 2025 00:30

Again e ????? These dirty politicians will never allow the people to think without the religion or e…do some thing better for the society.


Vasan
செப் 19, 2025 21:15

தமிழக அரசுக்கும், முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கும் மிக்க நன்றி. வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரத்தை இந்த தலைமுறை மக்களுக்கு நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி. இத்தருணத்தில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வேலு நாச்சியார் அம்மையார் பற்றிய கட்டுரைகளை பள்ளி பாட புத்தகத்தில் இணையுங்கள். வடக்கத்திய ஜான்சி ராணி அம்மையார் புகழ் போல் இவர் பெயரும் நிலைத்து நிற்கட்டும்.


Mani . V
செப் 19, 2025 16:39

என்ன பரமா பயம் வந்து விட்டதா? இல்லையென்றால் விஜய் கட்சி தூக்கிப் பிடித்த வேலு நாச்சியார் பெயரை வைக்கத் தோணுமா?


Vasan
செப் 19, 2025 16:00

வேலு நாச்சியார் அவர்களே, அந்த வாளை உருவி அப்படியே தலையில் ஒரு போடு போடுங்கள். ஆங்கிலேயர்கள் ஓடி விடுவார்கள். ஜெய் ஹிந்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 19, 2025 15:18

அடுத்து அரசாங்க செலவில் அஞ்சலை அம்மாளுக்கு சிலை ....அதானே....!!!


சின்ன சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
செப் 19, 2025 15:11

போடாங்க


முக்கிய வீடியோ