மேலும் செய்திகள்
இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும்
18-Mar-2025
சென்னை:தமிழகத்தில், நேற்று அதிகபட்சமாக வேலுாரில், 104 டிகிரி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, பகல் நேர வெப்ப நிலை, படிப்படியாக உயர்ந்து வருகிறது. இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, எட்டு நகரங்களில் வெயில், 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, திருப்பத்துார் ஆகிய நகரங்களில், தலா, 102 டிகிரி பாரன்ஹீட், அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, சேலம், திருத்தணி, திருச்சி நகரங்களில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18-Mar-2025