உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணு விஞ்ஞானி சிதம்பரம் காலமானார்!

அணு விஞ்ஞானி சிதம்பரம் காலமானார்!

மும்பை: பிரபல அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம், மும்பையில் இன்று (ஜன.,04) காலமானார். இவருக்கு வயது 88.பிரபல அணு விஞ்ஞானியும், 1975ம் ஆண்டு, 1998ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்தவர் ராஜகோபால சிதம்பரம், 88. இவர் 1936ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சென்னையில் பிறந்தார். மாநிலக்கல்லுாரியில் பட்டம் பெற்றார். பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் பி.எச்டி., பட்டம் பெற்ற பிறகு, 1962ல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். 1975 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்காற்றினார். அவருக்கு 1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்துல் கலாமுக்கு பிறகு,முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை பெற்றார். இந்த பதவியில் 17 ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தார். 1999ல் அவருக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.இவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். சர்வதேச அணுசக்தி முகமையின் சேர்மன் ஆகவும் பணியாற்றியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று (ஜன.,04) அதிகாலை 3.20 மணிக்கு காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.'இந்தியாவுக்கான சூப்பர் கம்ப்யூட்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்கியதில் முதன்மை பங்காற்றியவர் சிதம்பரம். இந்தியாவின் அணு ஆயுத திறனை மேம்படுத்தியதில் அவரது பங்கு மகத்தானது. அவரது பங்களிப்பின் காரணமாகவே, இந்தியா சர்வதேச அரங்கில் அணு சக்தி வல்லமை கொண்ட நாடாக வளர்ந்தது' என்று அவரது தலைமையில் பணியாற்றிய அதிகாரிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

அணு விஞ்ஞானி சிதம்பரம் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அணு சக்தி திட்டத்தின் பிரதான சிற்பியாக இருந்த, சிதம்பரம் இந்தியாவின் அறிவியல் மற்றும் ராஜதந்திர திறன் உயர்த்துவதற்கு பெரும் அளவு பங்களிப்பு செய்தார். அவரது முயற்சி நமது வருங்கால தலைமுறையினருக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சோலை பார்த்தி
ஜன 04, 2025 22:08

சிதம்பரம் ஐயா மறைவு இந்திய அனுசக்தி துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு.. ஐயாவின் ஆண்மா இறைவனிடம் சாந்தியடைய இந்தியர்களாகிய நாம் இறைவனை பிரார்த்திப்போம் ..இந்திய அனுசக்தி துறை விஞ்ஞானியான சிதம்பரம் ஐயா அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்க இந்திய அரசை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்


N.Purushothaman
ஜன 04, 2025 19:37

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


M Ramachandran
ஜன 04, 2025 17:31

அணுசக்தி திறன் ஆரம்ப கால விஞ்சானிகள் பலர் 20 விஞ்சானிகளும் மற்ற துறை வல்லுனர்களும் நாட்டிற்க்கா தாங்கள் அமெரிக்காவில் வகித்த பபெரிய பதிவி மற்றும் நல்ல ஊதியத்தை துறந்து நாட்டின் நலம் கருதி திரு ஹோமி பாபா அழைப்பிற்க்கேற்ப குறைந்த ஊதியத்தில் சேவை செய்ய வந்து இறுதி வரை அந்த அணுசக்தி துறை முண்ணேற்றத்திற்கு உறு துணையாய இருந்தனர்


T Jayakumar
ஜன 04, 2025 15:06

ஓம் சாந்தி.


Subramanian
ஜன 04, 2025 15:04

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


ram
ஜன 04, 2025 15:04

ஓம் ஷாந்தி


Sundararajan Kuthalingam
ஜன 04, 2025 14:45

விஞ்ஞானியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். ஓம் சாந்தி .


RAMAKRISHNAN NATESAN
ஜன 04, 2025 12:57

வருந்துகிறோம் ..... ஆழ்ந்த இரங்கல்கள் ..... முன்பே பத்மஸ்ரீ கொடுக்கப்பட்டிருந்தாலும் பத்ம விபூஷண் தாமதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது ..... அதுவும் பாஜக ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டுள்ளது ....


Ramalingam Shanmugam
ஜன 04, 2025 12:39

ஓம் ஷாந்தி


Ramesh Sargam
ஜன 04, 2025 12:19

விஞ்ஞானியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். ஓம் சாந்தி .


புதிய வீடியோ