உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்பு

துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்பு

புதுடில்லி: துணைவேந்தர் நியமன விவகாரத்தில், கவர்னரின் நிலைப்பாடுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை 2023ல் தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவில் பல்கலை மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கவர்னர் ரவி அறிவுறுத்தல் கொடுத்திருந்தார். இது விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, கவர்னரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு காரணங்களுக்காக வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில், இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைகளில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும், வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ள சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலை மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது' என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V GOPALAN
ஜன 18, 2025 13:28

First court should order arresting the CM and education minister who acted as fool as if they not know duplicate lecturers in thousand taking three salaries at a time. Then court can question the Governor


raju
ஜன 17, 2025 15:03

அரசு பணத்தில் மூன்று அரசு நிலைமைகள் அரசாங்கம் vs governor சுப்ரீம் கோர்ட் . எங்களுக்கு நல்லது செய்யவிலலை என்றாலும் ஏதோ பாக்கிஸ்தான் சீனா மாதிரி உங்கள் நடவடிக்கைகள் . உங்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் . கொஞ்சமaவது எண்ணங்களில் நேர்மை வேண்டும் .இல்லையெனில் பதவியை விட்டு விலகுக்குங்கள் .எந்த நாட்டிலும் நடக்காத கூத்து


GMM
ஜன 17, 2025 14:09

பல்கலை துணை வேந்தர் தேர்வில் தமிழக மாநில தேடுதல் குழு 2023ல், மானிய குழு உறுப்பினர் சேர்க்கவில்லை. தமிழக குழு சட்டப்படி செல்லுமா என்பதை முதலில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். தமிழக முடிவு சட்டப்படி செல்லும் என்றால் தான் கவர்னர் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடியும். தேசத்தில் 99.99 சதவீதம் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே துறை நீதி துறை மட்டும் தான் . தமிழக முடிவை ஏற்றால் , பல்கலை மானிய கமிசன் விதிகளை சட்டப்படி முடக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இந்த நடைமுறை பின் பற்றும் போது நிர்வாக, சட்ட குழப்பம் நிகழும். ?


karthik
ஜன 17, 2025 13:37

துணைவேந்தர்களை அரசியல்வாதிகள் நியமிப்பது காலக்கொடுமை...