உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி மதுரை மாநாட்டில் அறிவித்தார் விஜய்

தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி மதுரை மாநாட்டில் அறிவித்தார் விஜய்

மதுரை: “வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் மட்டும் தான் போட்டி இருக்கும். எங்களின் கொள்கை எதிரி பா.ஜ.,- தான், ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான்,” என, மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.அவர் பேசியதாவது: தமிழகத்தில், 1967லும், 1977லும் ஆட்சி மாற்றம் நடந்தது. அதைப்போல 2026ல் த.வெ.க., வெற்றியின் மூலம் வரலாறு திரும்பும். அரசியலுக்கு வருவதற்கு முன்னால், 'அவருக்கே வர விருப்பம் இல்லை. அவர் எப்படி வருவார்?' என கேட்டு ஜோசியம் சொன்னார்கள். கட்சிக்கு பெயர் வைத்ததும், மக்களிடம் பேர் வாங்க முடியாது என்றனர். இப்போது ஆட்சியை பிடிக்கிறது ஈசியில்லை; ஷூட்டிங் முடிச்சுட்டு வருகிறார் என்கின்றனர்.

கோட்டைக்கு போகும்,

'ரூட் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்று கதை, திரைக்கதை எழுதுகின்றனர். அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், லட்சம் பேர் இருக்கும் கூட்டத்தில் மட்டும் விஜய் இருக்கிறார் என தப்புக்கணக்கு போட வேண்டாம். இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமில்லை; நாளை ஆட்சியைப் பிடிக்க கோட்டைக்கு போகும், 'ரூட்டாகவும்' மாறும். நம் கணக்கு மக்களோடு மட்டும் தான். நாமும், மக்களும் எப்படி இருக்கிறோம் என அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். பெண்கள், வயதானவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், எல்லாருக்குமான அரசாக அமைப்பேன்.ஆதாயம் நோக்கமல்ல த.வெ.க., கட்சி அரசியல் ஆதாயத்திற்காக துவங்கவில்லை; கொள்கை, கோட்பாடுக்காக துவங்கப்பட்டது. நம் நிலையில் சமரசமின்றி உறுதியாக உள்ளோம். நமக்கு, ஒரே கொள்கை எதிரி பா.ஜ., தான். ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான். 'அண்டர்கிரவுண்ட்' ஆதாயத்திற்காக 'டீல்' போடும் கட்சியல்ல நாம். கூட்டணி அமைத்து ஊரை ஏமாற்றும் கட்சியல்ல. பாசிச பா.ஜ., உடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணியுடன் உறவு வைக்க, நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா? எனவே, அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கில்லை. இது, சுயமிழந்த கூட்டணியல்ல, சுயமரியாதை கூட்டணி.ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு அடிபணிந்து மக்களை மதச்சார்பற்ற கூட்டணி என்று ஏமாற்ற வேண்டியதில்லை. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் தரப்படும்.வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - -த.வெ.க., இடையே தான் போட்டி. கூட்டணி வைத்து தப்பிக்கலாம் என்று கணக்கு போடுபவர்களின் கனவு மெய்ப்படாது. எதிர்காலம் வரும்; என் கடமை வரும்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி

மறைமுக உறவுக்காரர்களான பாசிச பா.ஜ., -பாய்சன் தி.மு.க.,வுக்கு எதிராக, மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்போம்.பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்துள்ளார். ஒட்டுமொத்த மக்களுக்கு நல்லது செய்யவா அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா. தமிழக மீனவர்கள், 800 பேர் தாக்கப்பட்டனர். இனிமேலாவது, தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். தாமரை இலையில் தண்ணீர் கூட ஒட்டாது; அப்புறம் எப்படி தமிழக மக்கள் மனதில் ஒட்டும். ஒரு எம்.பி., சீட் கூட இல்லாததால், தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள்.பொருந்தா கூட்டணி எம்.ஜி.ஆர்., இருந்தவரை முதல்வர் நாற்காலியைப் பற்றி யாருமே கனவு கூட காணவில்லை.எதிரியை கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர்., அவர் ஆரம்பித்த கட்சியை கட்டி காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது, அக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அதனால் பொருந்தா கூட்டணியாக பா.ஜ., எந்த வேஷம் போட்டு வந்தாலும், தமிழகத்தை கைப்பற்ற முடியாது. தி.மு.க., வெளியில் எதிர்ப்பது போல உள்ளுக்குள் உறவு வைத்து, 'டிராமா' போடுகிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் போது, 'போங்க மோடி' என்றும், ஆளும் கட்சியாக இருந்தால், 'வாங்க மோடி' என்றும் குடைபிடித்து கும்பிடு போடுகிறது.வாட் ஸ்டாலின் அங்கிள் ? ரெய்டு வந்தால், இதுவரை போகாத டில்லி மீட்டிங்கிற்கு ஸ்டாலின் போகிறார். அப்புறம் அந்த பிரச்னை காணாமல் போய்விடும். ஸ்டாலின் அங்கிள்... வாட் அங்கிள்... ராங் அங்கிள். ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்... கபட நாடக அங்கிளே... மனசாட்சி இருந்தால், பதில் சொல்லுங்க. நேர்மை, நியாயம், சட்டம் - ஒழுங்கு உங்கள் ஆட்சியில் இருக்கா மை டியர் அங்கிள். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் என்கின்றனர். உலகத்தில், 'மிஸ்டர் கிளீன்' விருது உங்கள் உடன் இருப்பவர்களுக்கு தான் தரவேண்டும்.பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுத்தால் போதுமா, பிரச்னையை மூடி மறைக்கலாம் என நினைக்கின்றனரா? உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கதறுகின்றனர்.

உங்களை அப்பா என்று கூப்பிடுகின்றனரே, அந்த கதறல் கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள்? 'வொர்ஸ்ட் அங்கிள்' நீங்கள். கபட நாடக தி.மு.க., ஆட்சியை 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு விஜய் பேசினார்.

வெயிலில் பலர் மயக்கம்

மாநாட்டில் வெயிலில் 17 பேர் மயக்கம்; 250 பேருக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை

* விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் மேடைக்கு கீழே அமர்ந்திருந்தனர். இரண்டாவது மாநாடு நேற்று மதுரையில் நடந்த போது மேடையில் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.* மதியம் 3:45 மணிக்கு மாநாட்டு சிறப்பு பாடலுடன் தலைவர் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.* மதியம் 3:50 மணிக்கு மேடை முன் அமைக்கப்பட்ட 'ரேம்ப் வாக்' மேடையில் நடந்தார். 10 நிமிடத்தில் ரேம்ப் வாக் முடிந்து விஜய் மேடைக்கு திரும்பினார். அரை மணி நேரம் பேசிய விஜய், மாலை 5:24க்கு பேச்சை முடித்தார்.* 'ரேம்ப் வாக்'ன் போது தொண்டர்கள் உற்சாக மிகுதியில் தடுப்புகளைத் தாண்டி மேடையேறிய போது பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கே நின்று விஜய் 'செல்பி' எடுத்தார். தொண்டர்கள், கையில் வைத்திருந்த துண்டை விஜய்யை நோக்கி வீசினர்.* மேடையருகே அமைக்கப்பட்டிருந்த 40 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.* மாநாட்டு மேடையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 118 பேர் அமர்ந்திருந்தனர்.* 'உங்க விஜய் நா... வர்றேன்' என்கிற வரிகளில் விஜய் பாடி இசையமைப்பாளர் தமன் இசையமைத்த கட்சியின் கொள்கை விளக்கப்பாடல் காணொலி காட்சியாக திரையிடப்பட்டது.* எக்ஸ் தளத்தில் கட்சி மாநாடு 'டிரெண்டிங்கில்' முதலிடம் பிடித்தது.* விஜய்யை பார்த்த சந்தோஷத்துடன் அவரது பேச்சைக்கூட கேட்காமல் சிலர் பாதியிலேயே புறப்பட்டு சென்றனர்.* குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என விஜய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அவரது உத்தரவை மதிக்காமல் நிறைய பேர் கைக்குழந்தையுடன் மாநாட்டுக்கு வந்தனர். வெயிலின் கொடுமை தாங்காமல் குழந்தைகள் கதறி அழுத நிலையில் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து ஆசுவாசப்படுத்தினர்.* மதியம் 3:15 மணிக்கு மாநாடு துவங்கிய நிலையில், காலை 6:00 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். காலை 10:00 மணிக்கு மேல் கொளுத்தும் வெயிலுடன் சூறைக்காற்றும் சேர்ந்து தொண்டர்களை பந்தாடியது.* மாநாடு நடந்த 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு மரம் கூட இல்லாததால், வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் 17 பேர் மயக்கம் அடைந்தனர். அருகிலுள்ள 3 மருத்துவமனைகளுக்கு இவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். 250 பேருக்கு திடலில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.* வெயிலில் தவித்த தொண்டர்களின் மேல் ட்ரோன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தரையில் விரித்திருந்த பச்சை துணியை எடுத்து தலைக்கு மேலாக பிடித்த படி நின்றனர்.* மாநாடு நடந்த பாரப்பத்தி பகுதியில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.* மாநாடு நடக்கும் இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பாக வாகன பார்க்கிங் இருந்ததால் கொளுத்தும் வெயிலில் நடந்த தொண்டர்கள் களைப்படைந்தனர்.* மதுரை - துாத்துக்குடி நெடுஞ்சாலையில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பார்க்கிங் பகுதிகளிலும் வாகனங்கள் நிரம்பியதால், மாநாட்டிற்கு வந்திருந்த வாகனங்கள் நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசையாக ரோட்டோரம் நிறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

A.Gomathinayagam
ஆக 23, 2025 14:16

அவர் கூறுவதில் கவனிக்க வேண்டியது போட்டி அவருக்கும் ஆளும் கட்சிக்கு மட்டும் தான். ஏனெனில் அடுத்த பெரிய கட்சி கூட்டணி தலைவர் கூட்டணி ஆட்சி தான் என்பதை மேலும் மேலும் வலியுறுத்துகிறார். தமிழக மக்கள் மிக விவரமானவர்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் ,ஆகவேஅவர் கூறுவது சரியே


கூத்தாடி வாக்கியம்
ஆக 23, 2025 10:17

இவன் பேச்சில் சினிமா தனம் தான் தெிகிறது. இவன் கட்சி காரன்களும் அறிவு முதிர்சி உள்ள மாதிரி தெரியல.


SIVA
ஆக 23, 2025 09:09

இன்னைக்கு அண்ணன் விஜயகாந்த் என்று வசனம் பேசுகிறார் , அவர் உயிருடன் இருந்த போது அவரை பற்றி தவறாக செய்திகள் வந்த போது நவதுவாரங்களையும் மூடி கொண்டு தானே இருந்தார் , விஜயகாந்த் என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் இன்று விஜய் என்று ஒரு நடிகர் இருந்து இருக்க மாட்டார் , கேரளா படங்களில் ஷகிலாவுக்கு ஜோடியாகத்தான் நடித்து கொண்டு இருந்துருப்பார் ....


VSaminathan
ஆக 23, 2025 08:39

முதல்ல இவனோட பின்னணியை ஆராய்ந்தால் இவன் சினிமாவுக்குள் நுழைய விஜய்காந்தின் ஊன்றுகோல் தேவைப்பட்டது-அடுத்ததாக 50 படங்களுக்கு மேல் ஏதோ தேவலையென நடித்த இவனது கோணங்கி நடிப்பினால் வந்த கறுப்பு பணத்தை காப்பாற்ற எங்கே போகலாமென தேடியபோது பிறந்த மாவட்டமான மானங்கெட்ட ராமநாதபுர மக்களின் குணமான தி மு க வை நக்கி பிழைப்பதென அப்பனும் மகனுமஅக முடிவெடுத்து அங்கு சேர்ந்து அவர்கள் தரும் குத்தூசி புண்ணால் நொந்து வெளியேறியவன்-இதே அனுபவம் இமயமலை ட்ராமா ரஜினிக்கும் உண்டு-சரிஃஇய்த நடிகர்களெனப்படும் இவர்கள் ஏன் நடிக்க வருமுன் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை-ஒரு இறக்குமதி செய்யும் காருக்கு எக்சைஸ் வரி கட்டியாக வேண்டுமென்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இவன் மக்களை வழிநடத்த ஆசைப்படுவது குருடன் கடலில் நீச்சலடிக்க நினைப்பதைப் போன்றது-அடுத்ததாக இளைஞர்களென சொல்லப்படுபவர்கள் 1970க்கு முன்பு போல படிப்பில் சிறந்து விளங்குகின்றனரா?அவர்களது நிலையை ஈரோடு செங்குந்தர் பொறியியற்கல்லூரியில் ஒரு லீவ் லெட்டரைக் கூட நான் வேலை செய்த ஹாஸ்டலில் இருந்த 263 பேரில் ஒருவர் கூட எழுதவில்லை-ஆங்கிலத்தில் மிக கேவலமாக க்ரம்மாரே இல்லாமல் எழுதுகின்றனர்-இந்த வள்ளலில் இளைஞர் படையென தினமலர் குறிப்பிடப்படுபவர்கள் வெறும் அரசியலில் புகுந்து ஆட்டையப் போடும் களவாணிப் பயல்களாகவே இருப்பர்-அதுபோக இவனது செகரட்டரியான புஸ்ஸி ஆனந்தின் அடாவடிபற்றியும் கேள்வியுற்றோம்-அதென்ன பா ஜ கவை மட்டும் குறை சொல்கிறான் முதுகெலும்பற்ற பயந்தாங்கொள்ளிப் பயல்-இவனது அப்பன் மற்றும் இவனும் சேதுபதி பரம்பரையா-பிச்சைக்காரப் பயல் தன் பணத்தை பாதுகாக்க அரசியலை நாடும் இவன் தலைவனானால் மக்களுக்கு என்ன லாபம்.இப்போதே குடும்பத்தை மேடையிலேற்றும் இவன் பதவிக்கு வந்தால் தி மு க வின் குடும்ப கும்மாங்குத்தையே நிகழ்த்துவான்-தமிழகத்துக்கு நடிகர்கள் முதலமைச்சராவதே பெரிய ஆபத்து.


senthil kumar.k
ஆக 23, 2025 05:46

ஆம் யார் 2வது இடம் என்பதில் இவர்களுக்குள் போட்டி....


Kasimani Baskaran
ஆக 23, 2025 04:43

திராவிட போதையில் இருக்கும் தமிழனுக்கு கூடுதலான இன்னும் ஒரு போதை. நிஜ வாழ்க்கையில் விசை அண்ணா சாதித்தது என்ன? ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக்கார் வாங்கி அதற்க்கு ஒழுங்காக வரி கட்டாமல் நீதிமன்றம் சென்றவர் - இப்பேற்பட்டவர் நாட்டுக்கு நேர்மையாக இருப்பார் என்று எப்படி நம்ப முடியும்?


ManiMurugan Murugan
ஆக 22, 2025 23:02

தவெகா ஊரை ஏமாற்றுவதாக நினைத்து அவர்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள் அவ்வளவு தான் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணிக்கு எதிர் என்றால் அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்து எதிலாவது சொல்லி உள்ளாரா இது வரை கிடையாது அவர்கள் சொல்வதை சிறிது மாற்றி சொல்வார் அவ்வளவு தான் அவர்களின் பீ டீ ம் இளைஞர் அணி அவ்வளவு தான் தாமரை இலையில் தண்ணீர் இது ஏற்கனவே அயர்லாந்து வாரிசுதிராவிடமாடல் ஓட்டை கட்சி தி மு கா கூட்டணி சொல்லியது தான் Unity in Diversity வேற்றுமையி ல் ஒற்றுமை என்பவர்கள் அதாவது எல்லாம் திரை கதை வசனம் நாடகம் என்பதே இரு க் கட்சிகளும் ஒன்றே என்பதை அவர்களே தெளிவு ப் படுத்தி விட்டனர் அவ்வளவு தான்


தமிழ் மைந்தன்
ஆக 22, 2025 21:15

ஆமாம் காமெடி செய்வதில் உழறுவதில் கடும் போட்டிதான் இடையில் கமலஹாசனும் கடும் போட்டி கொடுப்பார்.


Subburamu Krishnasamy
ஆக 22, 2025 19:28

Poisonous political outfits and leaders are more in Tamizhagam


Modisha
ஆக 22, 2025 18:42

திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதற அடிக்கும் வேலை செய்யத்தான் ‘ அவங்க’ இவரை களமிறக்கி இருக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி