உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உதவி கேட்ட விஜய்; அறிவுரை சொன்ன ஜெகன்

 உதவி கேட்ட விஜய்; அறிவுரை சொன்ன ஜெகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் சுனில் ரெட்டி மகன் திருமணம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்றது, அரசியலாகி இருக்கிறது. இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: அரசியலில் ஜெகனை தன் 'ரோல் மாடல்' ஆக வைத்திருக்கிறார் விஜய். ஜெகனை போலதான், மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார். அவரை போல வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cw5y7ke6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெகனுக்கும் விஜய்க்கும் இடையே, மத ரீதியான ஒற்றுமையும் உள்ளது. இருவருக்கும் தேசிய அளவில் உறவுகள் இல்லாததால், புது கூட்டணியை உருவாக்க நினைக்கின்றனர். இதுபற்றி, இருவரும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக, சில விஷயங்கள் திருமண நிகழ்ச்சியில் நடந்த சந்திப்பில் பகிரப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட ஆந்திர எல்லை பகுதிகளிலும், மத்திய மாவட்டங்களிலும் ரெட்டி சமூக ஓட்டுகளும், கிறிஸ்துவ, தெலுங்கு ஓட்டுக்களும் உள்ளன. அந்த ஓட்டுகள், தற்போது தி.மு.க., வசமிருக்கின்றன. அவற்றை தன் பக்கம் கொண்டு வர உதவுமாறும், ஜெகனுக்கு இருக்கும் டில்லி உயர்மட்ட தொடர்பை தனக்கு ஆதரவாக செயல்பட சொல்லுமாறும், விஜய் கேட்டுள்ளார். அதேபோல, 'உங்களுக்கு எதிரி, தி.மு.க.,தான் என்றால், அவர்கள் குறித்து மட்டும் மேடைகளில் பேசுங்கள். தேவையில்லாமல், டில்லியை பகைத்துக் கொள்ள வேண்டாம் என ஜெகன் அறிவுரை கூறியிருக்கிறார். இவ்வாறு கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Siva Nesan
பிப் 11, 2026 14:12

தனது கட்சியினரை திரட்டி கிருஸ்மஸ் கொண்டாடிய ஜோசப் விஜய் ஏன் தீபாவளி பொங்கல் கொண்டாடவில்லை


சிவா. தொதநாடு.
பிப் 11, 2026 08:11

ஈ வே ராமசாமியை இறக்கி விட ஜெகன் சொல்லலையா


Ganesun Iyer
பிப் 10, 2026 21:03

தமிழகத்தில், திராவிடி ஆட்சிகள் ஒழிக்க விஜய் ஆட்சிக்கு வர வேண்டும்.. தமிழகம் இந்த "குட்டையில் ஊறிய மட்டைகளிடமிருந்து" விடை பெற தற்போது விஜய் அவசியம்.. காமராசரின் கனவு நிறைவேற வேண்டும்.


Dhanraj V.
பிப் 10, 2026 19:48

கொழுத்திப்போடுகிறது தினமலர்....


surya krishna
பிப் 10, 2026 17:40

சதுராட்டம் ஆட நினைக்கின்றனர் இந்துக்களே உஷார்


Pandi Muni
பிப் 10, 2026 17:39

முழிச்சிக்கோங்க இந்துக்களே


Rajan A
பிப் 10, 2026 17:37

நல்லா கேட்டப்போ. நானே தோத்து போய் நொந்து இருக்கிறேன்


Mohan Boffin
பிப் 10, 2026 16:20

சரியாக சொன்னீர்கள்


kulanthai kannan
பிப் 10, 2026 14:48

இனம் இனத்தோடு சேருகிறது


Palanisamy Sekar
பிப் 10, 2026 12:54

மிஷனரிகளின் கைக்கூலிகள் இந்த இருவரும். இந்துக்களே உஷாராக இருங்கள். வடக்குப்பட்டி ராமாசாமியை இந்த விஜய் கொண்டாடும்போதே இவர் இந்துக்களை எதிர்க்க வந்த மிஷினரிகள் கைக்கூலி என்று புரிந்துகொள்ள வேண்டும். பன்னிரண்டு கோடி வெளிநாட்டு காரை இறக்குமதி செய்துவிட்டு அதற்கு உண்டான இறக்குமதி வரியை கட்டாமல் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய இவர் சொல்றார் பதவிக்கு வந்தால் ஒரு பைசா ஊழல் பண்ண மாட்டேன்ன்னு. நாட்டுக்குத்தானே வரியாக செலுத்தப்போறார். அதனையே செய்ய மறுக்கும் இவர்தான் உத்தமன் வேஷம் போடுறார். விஜய் கனவுலகில் பதவிக்காக அலையும் நபர். தேசவிசுவாசத்தின் எதிரியாக தென்படுகின்ற நபர்.


புதிய வீடியோ