உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் பிடியில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்

போலீஸ் பிடியில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்

திருப்புவனம்: போலீஸ் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு த.வெ.க., தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார்.சிவகங்கை மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரின் காரில் இருந்து நகை திருடுபோனது. கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., த.வெ.க., தலைவர் விஜய், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., நிர்வாகி அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ve19mdfd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமார் வீட்டிற்கு சென்ற த.வெ.க., தலைவர் விஜய், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அவரின் தாயார் மற்றும் சகோதரர் கையை பிடித்து ஆறுதல் தெரிவித்த விஜய், ரூ.2 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார். அஜித்குமார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜய் உடன் த.வெ.க., நிர்வாகிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Palanisamy T
ஜூலை 03, 2025 07:43

1. இப்படியெல்லாம் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், கட்சி தலைவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வது உயிரிழப்பு நிதி வழங்குவது இதெல்லாம் உண்மையா, அரசியல் லாபத்திற்காகவா அல்லது வெறும் நடிப்பா? நாட்டில் நல்ல அரசு, சட்டம் ஒழுங்கு இவையெல்லாம் சரியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சில காவல் துறையினர் இப்படி ஒழுங்கற்ற நிலையில் கட்டுப்பாட்டையும் மீறி நடப்பது எல்லா ஊர்களிலும் எல்லா காலங்களிலும் நடப்பது இயல்பு. இதையெல்லாம் அரசியலாக்கி தங்களின் சுயநலத்திற்க்காக பயன்படுத்திக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் மாறவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2025 00:35

விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். திமுகவின் மைனாரிட்டி ஒட்டு காலி. திமுகவின் கிருத்துவ முஸ்லீம் ஓட்டுகளுக்கு ஜோசெப் விஜய் ஆப்படித்துவிட்டார்.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 21:51

சாத்தான்குளம் பீரியடிலயே இத செஞ்சிருக்கலாம். ஓஹோ ஜார்ஜ் பொன்னையா விடவில்லையா?


Oviya Vijay
ஜூலை 02, 2025 21:34

லஞ்சம் வஞ்சம் இல்லா அழகான ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முன்னெடுத்துச் செல்லுங்கள்... இன்றில்லையேல் என்றேனும் ஒருநாள் நீங்கள் உச்ச நிலையை அடைவீர்கள்... அதுவரை பொறுமை காத்து ஜாதி மத பேதமில்லாமல் தொடரட்டும் உங்கள் பணி...


Nagendran,Erode
ஜூலை 03, 2025 07:18

அப்படியே ஆகட்டும் ஆமென்..


Dwarakanath Putti
ஜூலை 02, 2025 20:51

விஜய் அண்ணா நீங்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு துணை நில்லுங்கள். மக்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். நீங்கள் அரசியல் பண்றீங்கன்னு சிலர் கருத்து போடுவாங்க... பரவா இல்லை அமைதியாக கடந்து செல்வோம்.


Sakthi,sivagangai
ஜூலை 02, 2025 21:20

Homework எல்லாம் செஞ்சுட்டியா? போய் சீக்கிரம் தூங்கு நாளைக்கு School க்கு போகணும்...


பாரத புதல்வன்
ஜூலை 02, 2025 20:51

போலீஸ் செய்த கொலை...


Ramesh Sargam
ஜூலை 02, 2025 20:21

பல கட்சி தலைவர்கள் அரசியல் செய்ய இப்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை காண செல்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை