உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை வருகிறார் விஜய்; ஏப்.,26, 27ம் தேதி த.வெ.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!

கோவை வருகிறார் விஜய்; ஏப்.,26, 27ம் தேதி த.வெ.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் வரும் ஏப்ரல் 26,27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விஜய் உரையாற்றுகிறார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில். குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில், வரும் ஏப்ரல் 26,27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக கட்சி சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விஜய் உரையாற்றுகிறார்.ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், பூத் கமிட்டி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் பூத் கமிட்டி முகவர்கள் மட்டும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பல்லவி
ஏப் 21, 2025 22:26

கோவை அம்மணி இருக்கே அதுக்கப்புறம் வேற ஒரு ஆள் தேவை இல்லை


Madras Madra
ஏப் 21, 2025 18:08

ஜோசப் விஜயின் கூட்டங்கள் கோவையில்


M R Radha
ஏப் 21, 2025 14:16

கேரவன் கோவை வருகிறதா? அண்ணாமலை போல செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க திராணி இருக்கா?


பாரத புதல்வன் ~தமிழாக குன்றியம்
ஏப் 21, 2025 14:15

சோசப்புக்கு என்ன ஆச்சு....!மக்களை சந்தித்து என்ன சொல்ல போறார்?


sankaranarayanan
ஏப் 21, 2025 13:20

என்ன பில்டப்பு அய்யா விஜய் கோவை வருகிறார் மக்களை சந்திக்கிறார் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் ஊடகங்களுக்கு ஒருவரை வேண்டுமென்றால் இப்படித்தான் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடுவார்கள் பிறகு அவரைப்பற்றிய ஒரு செய்தியும் வெளியே வாராது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 12:43

அறிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களிலேயே இவரது அரசியல் முடங்கிவிட்டது... இப்படியெல்லாம் விமர்சிச்சவங்களுக்கு பதிலடி கொடுக்கறார் ப்ரோ .....


நாஞ்சில் நாடோடி
ஏப் 21, 2025 12:30

விளையாட்டு பிள்ளை ...


Ganesh Moorthy
ஏப் 21, 2025 12:02

பனையூர் Virtual Party Leader. நீ ஒருபோதும் செய்தியாளர்களை சந்திக்க மாட்டீர்கள். நீ ஒரு பக்கா திமுக புகைப்பட நகல்


V K
ஏப் 21, 2025 11:31

என்ன யா ஏப்ரல் 26 27 அமாவாசை வருது போல் இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை