உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுதி வைத்து படிப்பவர் விஜய்: சீமான்

எழுதி வைத்து படிப்பவர் விஜய்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்: -பெரம்பலுாரில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்து விட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழக அரசு தேர்வாணையம் சார்பில், 3,937 பணியிடங்களுக்கான தேர்வு சரியாக நடத்தப்படவில்லை. தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால், வேலை இன்றி தவிப்பவர்களுக்கு, மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. பல துறைகளில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான், பணியில் அமர்த்துகின்றனர். தமிழகத்தில் எங்கு மக்கள் பிரச்னை இருந்தாலும், அங்கு சென்று நான் நிற்பேன். அதனால், எனக்கு சுற்றுப் பயணம் தேவையில்லை. த.வெ.க., தலைவர் விஜய் என்னை விமர்சித்தார். நான் அவரை விமர்ச்சிக்கவில்லை. அவரது கொள்கை, கோட்பாடு என்ன என்பதை விஜய் கூறவேண்டும். அவரால் பதில் சொல்ல முடியவில்லை; குறை கூறுவதாக குற்றம் சாட்டுகிறார். அரசியலுக்கு வந்த பின், அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும். எழுதி வைத்து படிக்கும் விஜயால், என் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Krishnamurthy Venkatesan
செப் 22, 2025 15:41

பெரிய பெரிய மேதாவிகள், அதிகாரிகள் குறிப்புகள் வைத்துக்கொண்டு பேசுவது உண்டு. குறிப்புகள் வைத்துக்கொண்டு பேசுபவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதில் என்ன தவறு இருக்க முடியும்.


Kjp
செப் 22, 2025 15:38

சீமானுக்கு விஜயின் மேல் கோபம் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக வருகிறது. நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கி விடுவோமோ என்ற பயம் தான் காரணம். கண்டிப்பாக சீமானின் ஓட்டு வங்கி சரியும்.


Nathansamwi
செப் 22, 2025 12:25

அதுனால என இப்போ? அவருக்கு வர கூட்டத்தை பார்த்து உனக்கு தான் வயித்தெறிச்சல் வருது போல...


ராமகிருஷ்ணன்
செப் 22, 2025 10:47

யார் எழுதி வைத்து படிப்பது படிக்க கூடாது என்று உனக்கு ஏன் எரியுது. நவீன தீப்பொறி ஆறுமுகம் மாதிரி பேசுற உனக்கு துண்டுசீட்டு தேவை இல்லை. உன் கூட்டங்கள் முடிந்து வெளியே வருபவர்களிடம் நீ என்ன பேசினாய் என்று கேட்டு பார். ஒருத்தனும் சரியா பதில் சொல்ல மாட்டான்கள்.


கனோஜ் ஆங்ரே
செப் 22, 2025 11:30

அய்யா அறிவாளி... அப்ப விஜய் பேசிய கூட்டம் முடிந்து வெளியே வந்த தற்குறிகளெல்லாம் அப்படியே என்ன பேசினார்...னு பதில் சொல்லிடுவாங்களா... வந்ததெல்லாமே 12, 13, 14 வயது பொடியன்கள், இப்பவே ரவுடிங்க மாதிரி விசிலடிக்கிறது, கோயில் பிரகாரத்தில் செறுப்புடன் ஏறுவது, மரத்தின்மேல் குரங்கு போல் ஏறி நிற்பது... இந்த ஒழுக்கசீலர்கள்தான் விஜய்..யின் தொண்டர்கள்...


Premanathan S
செப் 22, 2025 09:52

உன் கெக்கே பிக்கே சிரிப்பு, கிறுக்கு பேச்சு இவற்றை விட விஜய் பேச்சு பெட்டெர்


சிவா
செப் 22, 2025 09:16

சீமான் இப்போது .....


Mani . V
செப் 22, 2025 06:40

சரி, அதுனால என்ன? சமீபத்தில் நீங்கள் சந்தித்தீர்களே தமிழகத்தின் அப்பா அதாவது உங்கள் அண்ணன், துணை அப்பா அனைவரும் துண்டு சீட்டு பார்த்துத்தானே படிக்கிறார்கள். எங்கே திராணி இருந்தால் அதை விமர்சிங்களேன் பார்க்கலாம். உங்களுடைய அந்த கெக்கே, பிக்கே சிரிப்பு மற்றவர்கள் உங்களை விசரன் என்று கணிக்கத் தோன்றுகிறது.


Vasan
செப் 22, 2025 06:00

ஐயா, எழுதி வைத்து படிப்பது ஒரு குறையா? அதை ஏன் மிகைப்படுத்துகிறீர்கள்? ஒவ்வொருவருக்கும் சில பலங்கள் இருக்கும், பலவீனங்களும் இருக்கும். திரு.விஜய் போல் உங்களால் நடிக்க முடியுமா? அல்லது நடனமாட முடியுமா? முடியாதல்லவா? அது போல் தான் அவரால் உங்களைப்போன்று மேடைப்பேச்சு பேச இயலாது. அவர் மட்டுமல்ல, எவராலும் உங்களை போன்று பேச முடியாது. இப்போது சந்தோஷமா?


SUBBU,MADURAI
செப் 22, 2025 05:50

எழுதி வைத்துப் படிப்பவர் விஜய் என்று சீமான் சொல்வது உண்மைதான். அதே போன்று தனது ஆஸ்தான அறிவிலி முர...லி அடிமைகளில் ஒருவர் எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைக் கூட சரியாக படிக்கத் தெரியாத உயர்ந்த பதவியில் இருக்கும் தத்தி யார் என்பதையும் திரள்நிதி சைமன் என்கிற சீமான் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை