உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி நிர்வாகி திடீர் சாவு

விஜய் கட்சி நிர்வாகி திடீர் சாவு

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், புதுச்சேரி செயலாளர் சரவணன் திடீரென உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், புதுச்சேரி செயலாளராக இருந்தவர் சித்தன்குடியை சேர்ந்த சரவணன், 47; இவர், நேற்று மாலை 6.45 மணியளவில் வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில், தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்க இருந்த நிலையில், மாநாட்டு பணியில் சரவணன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், திடீரென அவர் இறந்ததால், புதுச்சேரி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
அக் 22, 2024 19:37

கட்சி முதல் உயிர்பலியை வாங்கிவிட்டது. பாவம் அவர் என்ன கனவுடன் அந்த கட்சியில் சேர்ந்தாரோ எல்லாம் தகடுப்பொடி. ஆழ்ந்த இரங்கல் அவர் குடும்பத்தினருக்கு.


Raj
அக் 22, 2024 13:25

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்னரே வைகுண்டபிராப்தி அடைந்து விட்டார், அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.


raja
அக் 22, 2024 08:10

சோசெப்பு விஜய்க்கு சகுனம் சரியில்லையே...


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 11:04

On energy news, this id raja s negative vibes, hatred and vengeance. This man should be seriously ill mentally. Better, the newsroom review his writings.Thank you.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை