உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்தூர் செல்ல விஜய் திட்டம்?: பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.,க்கு கடிதம்

பரந்தூர் செல்ல விஜய் திட்டம்?: பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.,க்கு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக போராடிவரும் பரந்தூர் மக்களை பொங்கல் பண்டிகை முடிந்து சந்திக்க த.வெ.க., தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து உள்ளனர்.இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து அப்பகுதி மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் த.வெ.க., சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க வேண்டும் என த.வெ.க., அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Laddoo
ஜன 13, 2025 04:28

வெளியில எங்கு போனாலும் ஒனக்கு பௌன்சர்கள் தானே பாதுகாப்பு கொடுக்குறாங்க?


Laddoo
ஜன 12, 2025 12:44

எப்பவும் உங்க பின்னாலேயே இருக்கும் பௌன்சர்கள் மீது நம்பிக்கையில்லையா?


sankaranarayanan
ஜன 12, 2025 08:43

இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுந்தான் எதுவுமே வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்ற கூக்குரலை மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள் அரசியல் கட்சிக்காரர்கள் ஏனெனில் இந்த அவல நிலைமை எப்போதுதான் தீரும் தமிழகம் முன்னேறும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் இயற்கையை அனுபவிக்க முடியும் வடக்கில் புதுப்புது திட்டம் கொண்டுவந்து நிறைவேற்றுகிறார்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்


GMM
ஜன 12, 2025 08:30

பரந்தூர் அபிவிருத்தி பணிகள் தமிழக வளர்ச்சிக்கு அவசியம். பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவை நிலத்திற்கு இருக்காது. நிலம் தன்னுடையது என்று கூசாமல் வழக்காடும் / போராடும் ஒரு கூட்டம் எல்லா போராட்டத்திலும் கலந்து கொண்டு, குட்டையை குழப்பும். அவர்கள் இலக்கு வேறு. விஜய் புரிந்து மக்களிடம் மாற்று வழி கேட்க வேண்டும். இது போன்ற பயண திட்டத்தை தவிர்ப்பது நல்லது. காங்கிரஸ் காலத்தில் உலகு எங்கும் வறுமை. அதனை பயன்படுத்தி, 3 படி முதல்வர் கட்சி வளர்த்தார். காங்கிரஸ் கட்சியை அழித்தார் .


Indhuindian
ஜன 12, 2025 08:00

எல்லா தலைவரும் மக்கள் எங்க பக்கம்ன்னு பீலா விடறாங்க ஆனா அந்த மக்களை சந்திக்க பொலிசுக்கிட்டே பாதுகாப்பு கேக்கறாங்க இது என்ன கூத்து தேவுடா


BHARATH
ஜன 11, 2025 22:58

சட்டத்துக்கு புறம்பா கட்டின உங்க வீட்டைத்தான் முதலில் இடிக்கணும்


மோகன சுந்தரம் லண்டன்
ஜன 11, 2025 22:50

இவரைப் போன்ற கூத்தாடி கும்பல்களிடம் தமிழக மக்கள் சிக்கிச் சின்னா பின்னமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம் உண்டாகுமோ தெரியவில்லை


Seekayyes
ஜன 12, 2025 05:10

விடிவு காலம் என்ற பேச்சுக்கே இடமில்லை சார். டாஸ்மாக் நாட்டு மக்கள் ஒருவித மனநோயாளிகள். கூத்தாடிகள் பின்னால் ஒருவரும், இலவசங்களை அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள்,உழைக்க பிடிக்காதவர்கள், டாஸ்மாக் அடிமைகள். விடிவுகாலம் வராது சார்.


T.sthivinayagam
ஜன 11, 2025 22:23

பொங்கல் பண்டிகை நேரத்தில் பரபரப்பை எற்படுத்த விஜய் திட்டமா அல்லது மேலிட திட்டமா


Mediagoons
ஜன 11, 2025 21:53

மத்திய அரசிடம் பாதுகாப்புப்படையின் ஆதரவை கேட்டுப்பெறலாமே?


Mediagoons
ஜன 11, 2025 21:51

சினிமாசூட் நடத்துவதைப்போல ஒருமணிநேரத்திற்கு பத்தாயிரம் டாலர் கொடுக்கவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை