உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் மரண சம்பவம் விஜய் தான் பொறுப்பேற்கணும்

கரூர் மரண சம்பவம் விஜய் தான் பொறுப்பேற்கணும்

கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள், கொஞ்சம் கூட அனுபவம் இல்லாதவர்கள். அதனால்தான், இத்தனை பெரிய கொடூரம் அங்கே நடந்திருக்கிறது. கூட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைபாய்ந்தபோது, நடிகர் விஜய் தண்ணீர் பாட்டிலை, பிரசார வாகனத்தில் இருந்து தூக்கி வீசியதால், அதைப் பிடிக்கச் சென்று, பலர் நெரிசலில் சிக்கினர். ஒரு நிகழ்ச்சியை, நாம் ஏற்பாடு செய்து நடத்தினால், நிகழ்ச்சியின் பலனாக விளையும் விளைவுகளை நாம் தான் ஏற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசை பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது. விஜய், மிகப் பெரிய கூட்டத்தை கூட்டும் சக்தி படைத்த மனிதராக இருக்கிறார். அதனால், வரும் காலங்களில், மிகப் பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்தி வழி நடத்தும் அளவுக்கான தொண்டர் படையையும், இளைஞர் அணியையும் விஜய் உருவாக்க வேண்டும். - அழகிரி முன்னாள் தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ