உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி தொடங்கிய விஜய்; கமல் அடைந்த தோல்வியில் கற்க வேண்டியவை ஏராளம்!

கட்சி தொடங்கிய விஜய்; கமல் அடைந்த தோல்வியில் கற்க வேண்டியவை ஏராளம்!

சென்னை: தனக்கு முன் கட்சி தொடங்கிய தமிழக நடிகர்களின் வெற்றி தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்தாலே, நடிகர் விஜய் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கும் முதல் நடிகர் அல்ல விஜய்; அவருக்கு முன் ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி தொடங்கி நடத்திப் பார்த்துவிட்டனர். அவர்களில் சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே; அவருக்கு போட்டியாக திரையுலகில் சாதனை படைத்த சிவாஜி, எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் அரசியலில் தனியாக கட்சி தொடங்கியும் சாதிக்க முடியவில்லை. ஆனால் விஜயகாந்த் கட்சி தொடங்கி குறிப்பிடத்தக்க சாதனை படைத்தார். முதல் தேர்தலில் எம்.எல்.ஏ., ஆகவும், அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். அவரது உடல் நலக்குறைவால் அவரது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இன்னொரு நாயகர் சரத்குமார், தனியாக கட்சி தொடங்கியும் சாதனை எதையும் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ., கட்சியில் ஐக்கியம் ஆகிவிட்டார்.தமிழ் திரை உலகில் பல்லாண்டுகளாக நிலைத்திருக்கும் கமல், பல்வேறு தரப்பினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். தனித்தும் போட்டியிட்டார். அவரது முதல் மாநாட்டில் கெஜ்ரிவால் உள்ளிட்ட வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டனர். ஆனாலும் அவரால் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற முடியவில்லை. விஜயகாந்த் அடைந்த வெற்றியை கூட கமல் பெற முடியாத நிலையில், ஒற்றை எம்.பி., பதவிக்காக தி.மு.க.,விடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.சினிமாவில், பல்லாண்டு காலம் நாயகனாக ஆதிக்கம் செலுத்தி வரும் கமல், அரசியலில் ஒரு துணை கதாபாத்திரமாகவே இருக்கிறார். விஜயகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர்களது ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வம் விஜய் ரசிகர்களிடம் இப்போது இருப்பதை காண முடிகிறது. ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடியது அல்ல என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் கமல் தோற்றுப் போனதற்கான காரணங்களை புரிந்து கொண்டாலே, விஜய்க்கு நல்லதொரு பாடம் கிடைத்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

சசி
அக் 28, 2024 06:52

சேர்த்து பார்க்க கூடாது


Naga Subramanian
அக் 28, 2024 06:08

வெறுப்பு அரசியலை மட்டுமே முன்னெடுத்து இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்த கமலுக்கு இந்த அவல நிலை போதவே போதாது. அரசியலில் இறங்கியதன் மூலம் கொஞ்சநஞ்சம் இருந்த நல்ல நடிகர் என்றிருந்த மரியாதையையும் இழந்து விட்டார். இனிமேல் அரசியல் தலைவர்கள், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற குறளை கூறுவதோடு "ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் - உயிரினும் ஓம்பப்படும்" என்ற குறளுக்கும் ஏற்றவர்களாக இருந்தால்தான் "காசு கொடுக்காமல்" தேர்தலில் வெற்றி பெரும் அளவிற்கு மக்கள் மனதில் நிற்க முடியும். இதுதான் உண்மை. இத்தனை காலம் கழித்தும் இராமாயனத்தில் இராமனுக்கு எப்படி இன்றளவும் மரியாதை உள்ளது என்பதே அதற்க்கு சாட்சி. மக்களை மாட்டு மந்தைகளாகவே கருத்திடும் அரசியலாளர்கள் இதை கருத்தில் ஆழமாக வைக்க வேண்டும்.


NRajasekar
அக் 28, 2024 05:57

அந்த குடும்ப கட்சிக்கு எதிர்து பேசுவது போல் நடித்து கொஞ்சம் மக்களை ஓகோ இவன் தைரியசாலி போல இருக்கே என்று நம்பவைத்து அப்புறம். அந்த கட்சியில் ஐக்கியமாயிடுவான் இதுக்கு கூலி பல ஆயிரம் கோடி ரூபாய்கள்கறுப்பு வெள்ளை என்று அடிக்கி விடுவான் மொத்தத்தில் குடும்ப கட்சிக்கு கொஞ்சம் செலவு . ஜுஜு பிஇதே பார்முலாவி்ல் இன்னோறுவன் வருவான்


பாலா
அக் 27, 2024 23:26

கட்சி தொடங்கினார்? தலையங்கத்தை மாற்றி தயவு செய்து " ஒரு mp–க்காகக் கட்சியை தொடங்கினார்"


Bala
அக் 27, 2024 21:34

தமிழக அரசியியலில் வருங்காலத்தில் இரண்டே இரண்டு கருத்தியல்கள்தான். ஒன்று தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் தமிழ் தேசியம் மட்டுமே என்ற கருத்தியலை கொண்டிருக்கும் சீமான் போன்றவர்கள். இரண்டாவது தமிழ் தமிழ்நாடு தமிழ் மக்களை உள்ளடக்கிய வலிமையான பாரதம் என்ற விசாலமான பார்வை கொண்ட இந்திய தேசியம் என்ற கருத்தியலை கொண்டிருக்கும் அண்ணாமலை போன்றவர்கள்.


Lion Drsekar
அக் 27, 2024 21:13

இவர்களை விட கற்க வேண்டியவர்கள் வாக்காளர்கள். இனியும் திருந்தவில்லை என்றால் எந்த இறைவனும் இவ்வுலகை காப்பாற்ற முடியாது.


M Ramachandran
அக் 27, 2024 20:57

இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால்,விளைவு ஏற்கனவே தமிழ் நாட்டு இருந்த இடம் ஓட்டை. இந்த ஓட்டை இன்னும் பெரியதாக ஒரு ஜிஞ்சினாக்கி பூ. காதிலேயே பூ


ARM PRAKASH
அக் 27, 2024 20:16

விஜய்யின் பேச்சை பார்த்தால் ,திமுக கூஜா கமல் மாதிரி தெரியவில்லை. நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும்.


sridhar
அக் 27, 2024 18:41

கமலுக்கும் இவருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கு ..யேசப்பா ..


என்றும் இந்தியன்
அக் 27, 2024 18:31

த.வெ.க தண்டமான வெட்டி கலக்கம் வாழ்க வாழ்க


புதிய வீடியோ