உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு விஜய் ஆதரவு

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு விஜய் ஆதரவு

சென்னை: எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், புறமுதுகு காட்டுவது ஏன்? என்று த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு, ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் பிரச்னைகளுக்கு தீர்வு தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ci10srjx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்கவும் வாக்குறுதி அளித்தது.அவற்றை நிறைவேற்றாத நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.1-4-2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு சி.பி.எஸ்., எனப்படும் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய ௮ம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி ௮திகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனதில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு செய்ய முன்வரவில்லை. ௮தை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஒய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் ௮மல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 30ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க., அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க., அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். ஒது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க., அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.இதுபோன்ற பாராமுகச் செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனதில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

டில்லி
மார் 24, 2025 10:54

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்தை கொடுங்கள்.


தி.ச.திருமலை முருகன்
மார் 24, 2025 04:52

நாட்டின் வருமானத்தில் 27% அரசு பணியாளரர்களுக்கே (2% உள்ள) ஊதியம் / ஓய்வூதியத்திற்கு செலவு செய்தால் மற்ற 98% மக்களுக்கு எப்படி நல்லது நடக்கும். எனவே இனி அரசு பணியாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு எந்த பயனையும் வழங்கக் கூடாது. நடிகர்கள் 100.கோடிக்கு மேல் மக்கள் பணத்தை கொள்ளையடித்ததால் அரசு ஊழியர்களுக்கும் வாங்கிக் கொடுத்து 5%.வாக்குகளை பெற துடிக்கின்றார்கள்


Velayutharaja Raja
மார் 23, 2025 22:23

தங்களின் ஆதரவிற்கு நன்றி சார்....


Narayanan KV
மார் 23, 2025 21:15

அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இது போன்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமற்றது. ஒவ்வொரு வருடமும் போரட்டம் செய்து வருகிறார்கள். அப்போதைய எதிர்கட்சிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு கொடுக்கும். அனைத்தும் அரசியல் நாடகம். நிதி நிலையை வைத்து பார்க்கும்போது இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகளும் இதனை நன்கு அறிவர். மாணவர்களின் தேர்வுக்காக இந்த போராட்ட நேரத்தை செலவளிக்கலாம். அரசு வேலை சாமானிய மக்களுக்கு செய்யும் சேவை.


m.arunachalam
மார் 23, 2025 21:06

எந்த நிதியை எடுத்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்க ராஜா . இது சினிமா அல்ல .


Mohanakrishnan
மார் 23, 2025 20:45

திருடர்களின் கூட்டத்திற்கு ஆதரவு உண்டா


ஜெய்ஹிந்த்புரம்
மார் 23, 2025 23:56

பாஜாக்கா கூட்டணிக்கு ஆதரவு இல்லைன்னு முதல் நாளே சொல்லிட்டாரே/


G Mahalingam
மார் 23, 2025 20:41

தமிழ் நாட்டில் 55 சதவீதம் தான் தமிழர்கள் இருக்கிறார்கள். மீதி 25 சதவீதம் தெலுங்கர்கள் 10 சதவீதம் கன்னடர்கள் 5 சதவீதம் மலையாளிகள் 5 சதவீதம் மராட்டி இந்தி பெங்காலி மற்ற மொழி பேசுபவர்கள். இதில் 97 சதவீதம் மக்களுக்கு தமிழ் பேச எழுத தெரியும். அடையாளம் காணுவது இயலாத காரியம். அதனால் சீமானால் வோட்டு வாங்க முடியவில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
மார் 23, 2025 23:55

அவர்கள் இந்தியர்கள் தானே? வடக்கன்ஸ் கணக்கை விட்டுட்டீரே ?


Narasimhan
மார் 23, 2025 19:25

இந்த கூத்தாடி தன்னை என்னவோ MGR போல் என்று மனப்பால் குடிக்கிறார். தமிழகத்தில் மெஜாரிட்டி தெலுங்கு பேசுபவர்கள் இருப்பதால் உமக்கு வாய்ப்பு இல்லை ராஜா.


vijai hindu
மார் 24, 2025 06:32

நடிக்க வந்துட்டா எல்லாருமே கூத்தாடி தான் யாரும் விதிவிலக்கில்லை


தேவதாஸ் புனே
மார் 23, 2025 19:15

துண்டு போட்டுட்டாரப்பா.....


Oviya Vijay
மார் 23, 2025 19:01

நீ என்ன தான் ஆதரவு குடுத்தாலும் அவங்க அங்க தான் ஓட்டு போடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை