உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் விஜய் தனித்துப் போட்டி; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

2026ல் விஜய் தனித்துப் போட்டி; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளார். விஜய்க்கு தேர்தல் ஆலோசனைகளை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வழங்கி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ydin2c62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில தினங்களுக்கு முன் சென்னையில் நடிகர் விஜயை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். த.வெ.க., கட்சி 2ம் ஆண்டு விழாவிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி: * தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன்.* பீஹார் தேர்தலில் எனக்கு உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார். அங்கு விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். * 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே அவர் முடிவு.* விஜய்யுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., விரும்புகிறது. ஆனால் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க த.வெ.க., விரும்பவில்லை.* விஜய் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெறுவார். விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைப்பார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 80 )

xyzabc
மார் 07, 2025 12:39

த வெ க தனியாக என்றால், தி மு க விற்கு சாதகமான நிலை. என்ன செய்ய ?


Babu S
மார் 03, 2025 00:04

தனியாக நின்றால் தனிஒரு மனிதனாகவே தன் கட்சி சார்பில் எம் எல் ஏ வாகசெல்ல வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது


Karthik
மார் 02, 2025 00:06

அதாவது 2026ல் ஜோசப் விஜய் தனித்தே தனிமையில் நிற்பார் னு சொல்றீங்க.. எனக்கு புரிஞ்சுது.. புரிய வேண்டியவர்களுக்கு புரிஞ்சா சரி..


Karthik
மார் 02, 2025 00:00

அதாவது 2026ல் ஜோசப் விஜய் தனித்தே.. தனிமையில் நிற்பார் னு நீங்க சொல்றது எனக்கு புரியுது.. புறிய வேண்டியவகளுக்கு புரிஞ்சா சரி.


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 21:38

அட போங்க , சீமான் இன்னமும் தைரியமாக தனித்து நின்று வோட்டு வங்கியை உயர்த்துவது சூப்பர்


அன்பு, சென்னை
மார் 01, 2025 21:15

விசிலடிச்சான் குஞ்சிகளா, இந்த எருமையை நம்பித்தான் 2021 ஓட்டுபோட்டீர்கள்? சைக்கிள் ஓட்டி ஓட்டுசாவடிக்கு போனான், விலைவாசி ஏற்றம் (பெட்ரோல் விலை காட்டி), இப்போ என்ன ஆச்சு, எல்லா விலை வாசியும் ஏறிபோச்சி (பால், தயிர், வீட்டுவரி, ஸ்டாம்ப் பேப்பர் விலை, தண்ணி வரி, குடிநீர்வரி, மின்சார விலை, இன்னும் பல... கொலை, கொள்ளை நாட்டியம் ஆடுது தமிழ்நாட்டில்) இப்போ இந்த கூத்தாடி பொறுப்பேற்பானா? விலைவாசி ஏற்றம் ஹிந்துக்களுக்கு மட்டும் இல்லை, கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்தான்... மதம் பார்க்காதீர்கள் மக்களே ... கொஞ்சமாவது திருந்துங்கள்


vadivelu
மார் 01, 2025 20:44

விஜய் தனித்து நின்றால் , எடப்பாடி சார் பா ஜா கா வுடன் கூட்டணி வைப்பது நிச்சயம் , தி முக விற்கு சரியான பாடம் கிடைக்கும்.


பகவதி
மார் 01, 2025 20:04

தீம்காவின் அடுத்த ராஜ்ய சபா MP தயார்


Ray
மார் 03, 2025 07:28

இவர் என்றாவது மேலவை - ராஜ்யசபா நிகழ்வுகளை நேரலையில் கண்டிருந்தால் இப்படி கருத்து போடுவாரா? அங்கே ப்ரமாதப் படுத்துவது தமிழக திமுக கேரள மற்றும் மேற்கு வங்க உறுப்பினர்களே. பதில் சொல்ல எழுந்த அமித்தை உட்கார வைத்து விட்டாரே ஒரு மேற்கு வங்க உறுப்பினர். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தம்பித்துரை விசுவாசத்தைக் காட்டி உறியடியில் சிக்கிக் கொண்டதை கண்டோம். COMING TO THE POINT விஜய்க்கு அந்த வாய்ப்பு பிஜேபி தரலாம் அதுதான் பல உளறல் மன்னர்கள் மந்தை.


பேசும் தமிழன்
மார் 01, 2025 20:03

ஆஹா..... பலிக்கடா ரெடியாகி விட்டது போல் தெரிகிறது.... எல்லாம் சரி கட்சிக்கு யார் தலைவர் ???


Balamurugan
மார் 01, 2025 19:55

இந்துக்கள் ஒட்டு ஒன்று சேர வேண்டும். அதிமுக திமுக மற்றும் விஜய் மூன்று பேருக்குமே போட கூடாது. விஜய்க்கு கண்டிப்பாக கிறிஸ்தவர்களின் ஒட்டு 90% அப்படியே விழும். ஆனால் இந்துக்கள் சிந்தியுங்கள். சினிமாவோடு நிறுத்திக்கொள்ளுங்கள். விஜய் திராவிட கட்சிகளை விட மோசமானவன். இன்று இந்துக்களுக்காக பேசக்கூடிய ஒரே கட்சி பிஜேபி தான். சிந்தியுங்கள்


vijai hindu
மார் 02, 2025 08:49

பாலமுருகன் நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை ஆனா ஆனா இந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள்


சமீபத்திய செய்தி