உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாறுமாறாக விமர்சித்த சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்; காரணம் என்ன; கமென்ட் செய்யுங்க வாசகர்களே!

தாறுமாறாக விமர்சித்த சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்; காரணம் என்ன; கமென்ட் செய்யுங்க வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய்' என்று சொன்ன சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், விஜய் கட்சி துவங்குவதாக கூறியதும், அவரை பலவாறாக பாராட்டி சீமான் பேசினார். கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், 'திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்' என்றார். அது மட்டுமின்றி, 'ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா' என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9eci8wuv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சாம்பாரா? கருவாட்டு குழம்பா?

இதையடுத்து விஜய் பற்றி சீமான் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சீமான் கூறியதாவது: 'திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. சாம்பார் என்றால் சாம்பார் என சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது.

அடிபட்டு செத்து விடுவாய்!

காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா? திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல; அது, அழுகிய கூமுட்டை. சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவேண்டும்; நடுவில் நின்றால் லாரி அடித்து இறந்துவிடுவாய். நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை. தம்பி நான் பேசுறது பஞ்ச் டயலாக் அல்ல தம்பி, நெஞ்சு டயலாக். வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா?

நயன்தாராவை பார்க்க கூட்டம்

விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார். என்னிலும் முதிர்ந்தவர். அனுபவமும், அரசியல் அறிவும் பெற்றவர் திருமாவளவன். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். நானே இவ்வளவு நிதானமாக இருக்கும் போது, எங்கள் அண்ணன் எவ்வளவு ஆழமா சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அந்த தப்பை பண்ண மாட்டாரு. உறுதியாக சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எதுவும் கணக்கு போடக் கூடாது. நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கிறது? இவ்வாறு சீமான் பேசினார்.'ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி; நான் எப்பவும் ஆதரிப்பேன்; அவர் என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் ஆதரிப்பேன்' என்று கட்சி ஆரம்பிப்பதாக கூறியபோது விஜய்-ஐ ஆதரித்த சீமான், கட்சி ஆரம்பித்த நிலையில் வேறு மாதிரியாக பேசினார். 'எதிரி எதிரிதான். தம்பியும் கிடையாது, அண்ணணும் கிடையாது' என சீமான் கூறினார். இதை வைத்து இரு கட்சியினரும் ஆன்லைனில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்து

இந்த நிலையில் விஜய் இன்று சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில், 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர், சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது, அரசியல் நாகரிகமா? எதிர்கால முதலீடா? என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். நீங்களும் உங்கள் கருத்தை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

தாமரை மலர்கிறது
நவ 08, 2024 19:56

தந்தை வழி சமூகமாக மலையாளி செபாஸ்டின் சைமன் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதன் மூலம், சீமான் ஓட்டுக்களை ஜோசெப் விஜய் குறிவைத்துள்ளார். திருமா விஜய்யுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று சீமான் கதறுவது ஆமைக்கறி சீமானுக்கு இன்னும் அரசியல் புரியவில்லை என்று தெரிகிறது. கூட்டணி இன்றி, விஜய் தேறமாட்டார் என்று ஜோசெப் விஜய்க்கு நன்கு தெரியும். மேலும் திமுகவின் கூட்டணிகளை உடைப்பது தான், அதிமுகவிற்கு மாற்றாக முழு எதிர்க்கட்சியாக மாறமுடியும் ஜோசெப் விஜய் நினைக்கிறார். எடப்பாடியால் செய்ய முடியாததை, அவர் செய்ய நினைக்கிறார். திரள்நிதி வசூலித்து ராஜவாழ்க்கை வாழ்ந்து வயிறு வளர்க்கும் சைமன் மாதிரி ஜோசெப் விஜய் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க கூடாது. திமுகவின் கூட்டணி ஓட்டுக்களை பிரிக்க வேண்டும். சீமான் பிஜேபி, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது நல்லது.


சமூக நல விருப்பி
நவ 08, 2024 19:26

2026 தேர்தலுக்குள் என்ன அக்கப்போர் எல்லாம் நடக்க போகிறதோ. சின்ன கட்சிகள் எல்லாம் உண்ட காட்டிக்காக அலைய போகிறது. திமுக உடைந்து எத்தனை பேர் விஜய் கட்சிக்கு வர போகிறார்கள் தெரியவில்லை


Raj S
நவ 08, 2024 19:13

இவனுக்கு பாடம் எடுத்தது அந்த திருட்டு திருமாவாம்... கருமம், கடைசியா நானும் சாக்கடைல இருந்து வந்தவன்தான்னு ஒத்துக்கிட்டாப்ல...


Ahamed Rafiq
நவ 08, 2024 18:56

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் முதல் ராம்சூரத்குமார் ஆசிரமம் வரை நான் தரிசிக்காத இடமே இல்லை சென்னையை விட்டு நிம்மதியாக திருவண்ணாமலையில் என் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிரஞ்ஜன் அஹமத்


Murugan
நவ 08, 2024 17:29

இவனுக எல்லாம் மனிதர்களே அல்ல ...


PALANI ANDAVAR
நவ 08, 2024 17:10

வெளிநாட்டு நிதிகளை அள்ளும் விஜய் மதவாத சக்திகளின் கிறிஸ்துவ நிதி முழுவதும் இனி விஜய்க்கு வந்து சேரும் அதன் மூலியுமே அரசியலுக்கு இறங்கி உள்ளார் வெற்றி பெறுவாரோ இல்லையோ பணத்தை அள்ளி வாரி கொள்வார்


வாய்மையே வெல்லும்
நவ 08, 2024 17:08

கோமாளிக்கும் ஏமாளிக்கும் ஆறுவித்யாசங்களை கண்டுபிடின்னு கேட்டாப்ல இருக்கு. ஒன்னு வெட்டிமுண்டம் இன்னொன்னு வீணாப்போன தண்டம் .. வேலையைப்பாருங்க நண்பர்களே வெட்டிப்பேச்சு வேணாம் நமக்கு , பத்துகாசுக்கு பிரயோஜனம் ஆகாத விஷயம்


vijay
நவ 08, 2024 18:19

கோமாளி ரொம்ப வருஷமாக தமிழ்நாட்டின் அதிபராக உள்ளார். அடுத்து கோணங்கி ஒருவர் வந்துள்ளார். கோணங்கி நமது மக்களை ஏமாளியாக நினைத்து களத்தில் இறங்கியுள்ளார். ஏமாளி ரசிகமக்களும், மற்றும் மக்களாகிய நாம்தான். முழிச்சிக்கோங்க மக்களே.


Palanisamy T
நவ 08, 2024 15:51

விஜய் பிழைக்கத் தெரிந்தவர். சீமானுக்கு பிழைக்கத் தெரியவில்லை. சின்னக் குழந்தையைக் கேட்டாலே இதைத்தான் சொல்லும்


RAJ
நவ 08, 2024 15:35

என்னனா, விஜய் தேரு . சைமன் சேறு .. .. விஜய் மனிதன்.. சைமன் மனநிலை பாதிக்கப்பட்டவன்.. இப்படி நிறைய சொல்லலாம்.. ..


vijay
நவ 08, 2024 18:57

விஜய் மற்றும் அவரது அப்பா, மாமா எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? இல்லை, தெரிஞ்சே நடிகரின் மீதுள்ள அபிமானத்தால் இளைய தளபதிக்கு முட்டுக்கொடுக்கறீர்களா?. போயி உங்கள் நடிகரின் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றிய பழைய செய்திகளை இணையத்தில் தேடுங்கள். கட்சி ஆரம்பிக்கும் வரைக்கும் லெட்டர்-பேடில் அவரின் முழு பெயரான ஜோசேப் விஜய் என்று தலைப்பில் போட்டு, கூடவே "ஜீசஸ் சேவ்ஸ்" அதாவது ஜீசஸ் காப்பாற்றுகிறார்" என்று எழுதிருக்கும். கட்சி ஆரம்பித்த பின்னர், கட்சியின் லெட்டர் பேடில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று திருக்குறளின் வரியை வைத்திருக்கிறார். நல்லது. அதற்கு பதிலாக முன்பு போலவே ஜோசேப் விஜய் என்ற முழு பெயரோடு ""ஜீசஸ் சேவ்ஸ்" என்றே கட்சியின் லெட்டர் பேடில் வைத்திருக்கலாமே. அதானே நியாயம், நேர்மை, உண்மையும் கூட. ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் இது எனது வேண்டுகோளுங்கண்ணே. ரசிக தொண்டர்களான நீங்கள் பொங்கியெழுந்து "அது அப்போ அண்ணன் நடிகராக இருந்தப்போ, இது இப்போ அண்ணண் கட்சி தலைவராகி, எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவாகி, மக்களையும் ஆளப்போகிறார்...." என்றெல்லாம் பதிலடி கொடுக்கலாம். இப்போதே சொல்லிவிடுகிறேன் ரசிக தொண்டர்களே அவர் நடிகராக உருவெடுத்து வளர்ந்தபோதெல்லாம் கூட நின்றது எல்லா தரப்பு ரசிக மக்களும்தான். கட்சி பாகுபாடின்றி, ஜாதி, மத வேறுபாடின்றி எல்லா நிலை மக்களும் காசு கொடுத்து உங்கள் அண்ணனின், அன்பு தளபதியின் படங்களை பார்த்து அவரை உயர்ந்த நிலைக்கு வரவைத்திருக்கிறார்கள். அவருக்கு திறமை இருந்துச்சு, ஸ்டார் அந்தஸ்து இருந்துச்சு, அதனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார் என்பவர்களுக்கு என் பதில், அந்த ஸ்டார் அந்தஸ்து உருவாக காரணமே ரசிக மக்கள்தான். நடிகராக ரசிக மன்ற லெட்டர் பேடில் அவர் தன்னுடைய முழு பெயரை போட்டாரே, அப்போதே ""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" போன்ற ஏதாச்சும் ஒன்றை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்போதும் சரி, இப்போதும் சரி உங்கள் தலைவரின் பின்னால் இருந்து இயக்குவது, உதவுவது யார் என்பது உங்களுக்கு தெரியாமல் புரியாமல் இருக்கலாம். உங்கள் மண்டைக்குள் கொஞ்சமாக மிச்சம் வைத்திருக்கும் மசாலாவை கொஞ்சம் நல்லபடியாக பயன்படுத்தி அனைத்தையும் யோசித்து, பகுத்தாய்ந்தால் "உண்மை, உண்மை" உனக்குள் உரைக்கும்.


Kandhavel
நவ 08, 2024 15:28

மக்கள் அனைவரும் முட்டாள்கள் இல்லை


புதிய வீடியோ