உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். மாநில நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகினர். பனையூரில் உள்ள வீட்டில் விஜய் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கட்சி பணிகளில், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், மீண்டும் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a0sa4ng9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று (நவ.,05) காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இரங்கல் தீர்மானம்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னென்ன?* தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.* பெண்கள் பாதுகாப்பு, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது என்பதை கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.* வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றம்.*பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் பணிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.* மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி தலைவர் விஜய், அவரை காண வரும் மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.* டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். * வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.* தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.* ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.* தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.* கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராஜா
நவ 05, 2025 20:59

ஒருவன் 20 ரூபாய் நோட்டை வைத்து ஏமாற்றி விட்டார், அடுத்தவர் மக்களை ஏமாற்றி வாக்கு சீட்டை ஏமாற்றி விட்டார் இந்த ஜென்மங்கள் எல்லாம் திருட்டு வந்தேறி கூட்டம். எங்கே உருப்பட போகிறது .


தாமரை மலர்கிறது
நவ 05, 2025 20:05

போட்டியே பிஜேபி மற்றும் திமுக தலைமையிலான இரு வலுவான யானைகளுக்குமான போட்டி. இடையே புகும் முயல்குட்டிகள் மிதிபட்டு சாகும். இதை உணர்ந்து ஏற்கனவே எடப்பாடி புத்திசாலித்தனமாக பிஜேபி தலைமையிலான கூட்டணியை தேர்ந்தெடுத்துவிட்டார். விரைவில் எடப்பாடி போன்று விஜய்யும் பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வருவார்.


அயோக்கிய திருட்டு திராவிடன்
நவ 05, 2025 16:15

அவர் தானே கட்சியை ஆரம்பித்தார் அவர் தானே அதன் தலைவன் பின் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.


V K
நவ 05, 2025 15:42

அப்போ சங்கீதாவுக்கு அதிகாரம் இல்லை


A.Gomathinayagam
நவ 05, 2025 14:21

குறைந்தது நான்கு முனை போட்டி .முடிவு வாக்காளர்கள் போடும் ஓட்டில்


Vasan
நவ 05, 2025 16:31

இரு முனைக்கு மேல் போய்விட்டாலே, ADVANTAGE DMK.


vivek
நவ 05, 2025 14:09

யாருமே இல்லாத டி கடைக்கு எதுக்கு இப்படி டீ ஆத்திரார்


vivek
நவ 05, 2025 14:04

பாவமா இருக்கு....எப்படி கதறுகிறது உளறுகிறது ....பாக்கவே பாவமா இருக்கு


sundarsvpr
நவ 05, 2025 14:01

விஜய் ஜோசப் அரசியல் கட்சியில் பணியாற்றி தலைவராக வரவில்லை. எம் ஜி ராமச்சந்திரன் ஜெயலலிதா எஸ் எஸ் ராஜேந்திரன் போன்றோர் கட்சிக்கு பாடுபட்டு வந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கு வருவதில்லை. பாதுகாப்பான வழிப்பயணத்திற்கு ஏற்பாடு செய்வதில்லை. தி மு க எ.தி மு க கட்சிகளில் தொண்டர்கள் அதிகம் கூட்டம் நல்லபடிஅமைதியாய் நடக்க உதவுவார்கள் இந்த கட்டுப்பாடான நிலைக்கு தவே க கட்சி தலைமை இல்லை.


திகழ்ஓவியன்
நவ 05, 2025 13:51

விஜய் டெபாசிட் வாங்குவாரா இல்லை சீமானை விட அதிகம் வாங்குவாரா , கானல் நீர் தான் விஜய் நிலை


திகழ்ஓவியன்
நவ 05, 2025 13:48

யார் எப்படி சேர்ந்தாலும் வெற்றி DMK தான்


Arjun
நவ 05, 2025 16:13

பகல் கனவு கள்ள ஓட்டும் போடமுடியாது


Arjun
நவ 05, 2025 16:17

அய்யோ பாவம் தமிழக மக்கள் படித்தவருக்கு ஓட்டு போடமாட்டார்கள் நோட்டு கொடுத்தவருக்கு ஓட்டு போட்டார்கள், இப்ப நடித்துவரும் வருகிறார்.


முக்கிய வீடியோ