உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயலட்சுமி அடுத்த வீடியோ; இதுக்கு ஒரு முடிவே இல்லையா!

விஜயலட்சுமி அடுத்த வீடியோ; இதுக்கு ஒரு முடிவே இல்லையா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உங்க முதல்வர் கனவை விட்டு விடுங்க மிஸ்டர் சீமான்' என்று கூறி, நடிகை விஜயலட்சுமி இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இருக்கும் தகராறு, எல்லோரும் அறிந்தது தான். அவ்வப்போது சீமானை திட்டி வீடியோ வெளியிடுவதும், பிறகு அமைதியாகி விடுவதும் விஜயலட்சுமிக்கு வாடிக்கை. லோக்சபா தேர்தல் நேரத்தில் விஜயலட்சுமி, சென்னையில் வந்திறங்கி போலீசில் சீமான் மீது புகார் கொடுத்து, பேட்டியும் கொடுத்தார். அவரது பின்னணியில் தி.மு.க., இருப்பதாக, அப்போது சீமான் குற்றம் சாட்டினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j4gi8oay&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில மாதங்களாக அமைதியாக இருந்த விஜயலட்சுமி, இப்போது விஜய் - சீமான் இடையிலான உரசல் பின்னணியில் மீண்டும் வீடியோ வெளியிட தொடங்கியுள்ளார். நேற்று வெளியிட்ட இரண்டாம் வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான். ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியத்தை பற்றி இவ்வளவு கதை பேசிவிட்டு, 'நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா, அம்மாவுக்கு பிறந்து இருக்கிறேன்' என்று சொல்லியாச்சு. அப்போ நான் என்ன ஹிந்தி அப்பா, அம்மாவுக்காக பிறந்து இருக்கிறேன்? நானும் தமிழ் அப்பா, அம்மாவுக்கு தான் பிறந்து இருக்கிறேன். ஒண்ணும் இல்லை சீமான். நெக்ஸ்ட் முதல்வர் ஆக்குங்க என்று சொன்னீங்களே?

ரூ.50 ஆயிரம்

தமிழக மக்களுக்கு ஒரே விஷயத்திற்கு தெளிவு கொடுங்கள். அதன் பிறகு உங்களை முதல்வர் ஆக்கலாமா? வேண்டாமா? என அவங்க முடிவு செய்வார்கள். போன வருடம், மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை, நீங்கள் எனது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரிய கூடாது. நாம் தமிழர் கட்சிக்கு தெரிய கூடாது. மீடியாவுக்கு தெரிய கூடாது. தமிழகத்தில் யாருக்குமே தெரிய கூடாது என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, அதன் பிறகு இரவும்,பகலுமாக என்னிடம் வீடியோ வாங்கிட்டு, டார்ச்சர் செய்தீங்களே, அது எல்லாம் தாங்க முடியாமல் தான் நான் வழக்கு போட்டேன்.அதனை அப்படியே மறைத்து விட்டு, தி.மு.க., இவங்கள கூட்டிட்டு வந்து இருக்காங்க, எனது பெயரை நாசம் செய்வதற்கு என்று ஒரு பச்சை பொய் சொன்னீங்களே? அவ்வளவு தான், உங்களுடைய யோக்யதை மிஸ்டர் சீமான். ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்து சேர்ந்த மதுரை செல்வம், எனக்கு ரூ. ஒரு கோடி குடுத்து இருக்கிறாரா? அது எல்லாம் என்ன என்று சொல்வதற்கு உங்களுக்கு யோக்யதை இருக்கிறதா? ஏதோ வாபஸ் கொடுத்துவிட்டு போய்விட்டா என்று நினைத்து, உங்க மனைவி முன் நின்று, 'பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்' என்று கெக்கே பிக்கென்னு சிரித்தீர்களே, இது தான் உங்களுடைய யோக்யதை.இது எல்லாம் பார்த்த பிறகு, உங்களை முதல்வர் ஆக்க போறாங்களா? ஒன்றும் இல்லை மிஸ்டர் சீமான், உங்களுக்கு முதலில் உண்மை பேசும் யோக்யதையே கிடையாது. உங்கள மாதிரி துரோகிகள் கையில் எல்லாம், தமிழகம் என்னைக்கும் சிக்காது. சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் விடவும் மாட்டார்கள். ஓகேவா, உங்களது முதல்வர் கனவை எல்லாம் இப்பொழுதே விட்டுவிடுங்கள். என்னுடைய கண்ணீர் விட, எங்க அக்காவோட கண்ணீர் என்னைக்கும் உங்களை வந்து சும்மாவிடாது. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Rajan
நவ 13, 2024 07:03

சீமானுக்கு விஜய் மற்றும் விஜயலக்ஷ்மி பெயர் ஆகாது போல


sundararajan
நவ 13, 2024 04:46

குப்பைத் தொட்டியில் குடியிருக்கச் சென்றால் துர்நாற்றமும் ,அழுக்கும் தான் உடம்பில் படும். சீமானை முடிந்த அளவுக்கு ,வெளிக்காட்டி விட்டீர்கள்.இனிமேல் உங்கள் வாழ்க்கை மற்றும் மன நிம்மதியை நாடுங்கள். எவ்வளவு சொன்னாலும் மக்களும் அவனுக்கு ஓட்டுப் போடுவார்கள். அவனும் திருந்த வாய்ப்பில்லை. சினிமா வாழ்வு என்பது, பெண்களுக்கு வீட்டில் பூச்சி போல. சிக்கினால் சீரழித்து விடுவார்கள்.


தாமரை மலர்கிறது
நவ 12, 2024 19:54

எத்தனுக்கு எத்தன் என்பதை போன்று வசூல் செய்றவன்ட்டேயே மிரட்டி வசூல் பண்றது தான் நம்ம இலங்கை நடிகையின் செயல். அப்பப்ப ஆன் லைனில் வந்து ஆட்டம் போடறவனை ஆட்டம் காண செய்றது தான் விஜயலக்ஷிமியின் செயல். உங்கள் செயல் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.


MUTHU
நவ 12, 2024 18:49

யம்மோவ். உங்களுக்கு இந்தநேரம் ஆபர் நிறைய வந்திருக்குமே. வந்திருக்கணும்.


MADHAVAN
நவ 12, 2024 18:11

நான் ஆழமான அரசியல்வாதி னு சொல்லும்போதே சந்தேகம் வந்துச்சு


Suppan
நவ 12, 2024 15:51

திராவிட அரசியலில் இதெல்லாம் சகஜம் அம்மணி. திராவிடத்தலைவர்களின் "ஒழுக்கம்" ஊரறிந்தது . ஓட்டுப்போடும் மக்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்களுக்கு 500, 1000 என்று கொடுத்தால் போதும். கடைந்தெடுத்த அயோக்கியனுக்கும், ஊழல்வாதிக்கும் பெண்பித்தனுக்கும், கொலைகாரனுக்கும் , கொள்ளைக்காரனுக்கும் கூட ஓட்டுப்போடுவார்கள் அம்மணி .


Ms Mahadevan Mahadevan
நவ 12, 2024 15:21

இந்த மாதிரியான அ சிங்கத்திற்கு எல்லாம் கருத்து சொல்ல வேண்டியது இல்லை.


Narayanan
நவ 12, 2024 14:44

அடப்பாவி விஜயலக்ஷ்மி அக்காவையும் விடலையா அவர்கள் கண்ணீரும் சேரும்னு சொல்றாங்களே அசிங்கமா இருக்கு உன் திருவிளையாடல்


Vijay D Ratnam
நவ 12, 2024 14:39

யக்கோவ், சீமான் தமிழக முதலமைச்சர் ஆவதற்காக பிழைப்பு நடத்தவில்லை. அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளை தாண்டி ஆட்சி அமைக்க முடியும் என்று நினைக்குமளவுக்கு அவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல. அதிமுக திமுக இரண்டுக்கும் வாக்கு வித்யாசம் என்றால் இரண்டு சதவிகிதம்தான். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் மொத்தமாக அதிமுக பக்கம் சென்று விடாமல் லைட்டாக டேமேஜ் செய்ய கமிஷனுக்கு கட்சி நடத்துகிறார். அதற்கு பெரியளவில் கரன்சி வந்துவிடுகிறது. சமீபத்தில் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு எப்படி மதுபான தொழிற்சாலைகள் நடத்தும் திமுக குடும்பம் அதன் பினாமி குடும்பங்கள் ஃபைனான்ஸ் செய்ததோ, அது போல தேர்தலுக்கு தேர்தல் இவருக்கு ஒட்டு பிரிக்க ஃபைனான்ஸ் அருவி போல கொட்டும். இப்போ அந்த பிஸ்னெசுக்கு போட்டியா விஜய் வேறு வந்துட்டாரா, அதான் கத்துகிறார்.


Anantharaman Srinivasan
நவ 12, 2024 13:59

என்னுடைய கண்ணீர் விட, எங்க அக்காவோட கண்ணீர் உங்களை சும்மாவிடாது. நடிகை விஜயலட்சுமி .. அடப்பாவமே அக்காவையும் சீரழித்தானா? உண்மையிலேயே சீமான் தான்


முக்கிய வீடியோ