உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகா பெரியவா ஆங்கில தொகுப்பு நுாலை வெளியிட்டார் விஜயேந்திரர்

மகா பெரியவா ஆங்கில தொகுப்பு நுாலை வெளியிட்டார் விஜயேந்திரர்

திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, 'மகா பெரியவா' தொகுதிகள் 5, 6, 7 ஆகிய நுால்களின் ஆங்கில தொகுப்பு, 'மகா பெரியவா தொகுதி 3' என்ற நுாலை, திருப்பதியில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார். 'தினமலர்' இணை இயக்குநரும், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் இயக்குநருமான ஆர்.லட்சுமிபதி, நுாலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். திருப்பதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில் நுாலை வெளியிட்ட பின், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறுகையில், ''அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறையினர் மகா பெரியவாளை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக, அந்த மகானை பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் தொடர்ந்து நுால்கள் வெளியிட்டு வரும் தாமரை பிரதர்ஸ் மீடியாவின் இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பாராட்டிற்குரியவர். ''தினமலர் நாளிதழின் இந்த பணி மேலும் தொடர்ந்து பல தொகுதிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வர வேண்டும்,'' என, ஆசி வழங்கினார். நுாலை, பாமா தேவி ரவி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பிற்கு கோவை ஆடிட்டர் டி.வி.சுரேஷ் உதவியுள்ளார். இந்நிகழ்வில், நுாலாசிரியர் பி.சுவாமிநாதன் கலந்து கொண்டார். இதுவரை இவர் எழுதியுள்ள 'மகா பெரியவா' 13 தொகுதி நுால்கள் தாமரை பிரதர்ஸ் மீடியாவில் வெளியாகி உள்ளன. விரைவில் மகா பெரியவா தொகுதி 14, 15 வெளியாக உள்ளன. புத்தகத்தை பெற தொடர்புக்கு டோல்பிரீ எண்: 1800 425 7700, வாட்ஸாப்: 75500 09565.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ