உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்:த.வெ.க., வெளியிட்ட திடீர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்:த.வெ.க., வெளியிட்ட திடீர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:த.வெ.க., தலைவரான நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் வர இருக்கிறார் என்று, அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.த.வெ.க., கட்சி தலைவரான நடிகர் விஜய், கட்சி தொடங்கியதில் இருந்து வெளியில் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.கட்சி மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீடு, பரந்துார் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்கச்சென்றது என மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே அவர் வெளியில் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்.இதனால், 'வீட்டை விட்டும், அலுவலகத்தை விட்டும் எங்கும் செல்லாமல் அறிக்கை அரசியல் செய்கிறார். ஒர்க் பிரம் ஹோம் அரசியல்வாதி' என்ற விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.அவரும் அதற்கு தகுந்தபடி, வெள்ள நிவாரணம் வழங்குவதை கூட, பாதிக்கப்பட்டவர்களை தன் இடம் வரவழைத்து வழங்கினார் விஜய். அவர் எப்போது வெளியில் வந்து மக்களை சந்திப்பார், பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்ற கேள்வி, அனைவருக்கும் இருக்கிறது.அதற்கு பதில் அளிக்கும் வகையில், அவரது கட்சி பொருளாளர் வெங்கட்ராமன், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ''உங்களைப்பார்க்க, உங்கள் இடம் தேடி தலைவர் விஜய் வரப்போகிறார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் வரப்போகிறார். மக்களோடு மக்களாக, அனைத்து இடங்களுக்கும் வரப்போகிறார்,'' என்றார்.இதன் மூலம், கட்சியை பிரபலப்படுத்த விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bhaskaran
பிப் 22, 2025 10:16

எல்லாரும் எம்ஜியார் .விஜயகாந்த்ஆக முடியுமா புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான்


orange தமிழன்
பிப் 22, 2025 09:52

தீடீர் கட்சி...... தீடீர் மாநாடு.......தீடீர் பயணம்......தீடீர் முடிவு (கட்சிக்கு)......


Laddoo
பிப் 22, 2025 06:51

கேரவன் தலைவன். பார்க்க வரும் குஞ்சுகளின் வோட்டு டவுட்டு


Suresh Velan
பிப் 21, 2025 23:21

இந்த ஆளுக்கு Y பிரிவு பாதுகாப்பு வாங்கி கொடுத்த பிஜேபி கு ஒரு formality கு கூட நன்றி தெரிவிக்க வில்லை , இப்படி பட்ட நன்றி கெட்டவர் சுத்த வேஸ்ட் இங்கே ஒன்றும் சாதிக்க போவதில்லை , இவர் வெத்து வேட்டு என்பது தமிழகத்தின் சுற்று பயணத்தின் போது தெரியும்


Bhakt
பிப் 21, 2025 23:19

சினிமால டூப் போடுற மாதிரி இதற்கும் டூப்பை அனுப்புவார்


m.arunachalam
பிப் 21, 2025 22:45

நம் தலையெழுத்து .


RAMAKRISHNAN NATESAN
பிப் 21, 2025 20:00

அண்ணாமலை அடித்து ஆடுவதால் அதிமுகவை பாஜக விஞ்சுகிறது ..... பெயரெடுக்கிறது .... பிரபலம் ஆகிறது ..... கவனம் பெறுகிறது .... மக்களின் அபிமானம் கிடைக்கிறது .... உன்ன இறக்குனதுக்கு என்னதான் பிரயோஜனம்? என்று குதித்திருப்பார் துண்டு சீட்டு ..... ஆகவே ஹீரோ இனி சுற்றுப்பயணம் செல்வார் ..... மக்கள் கவனத்தை ஈர்க்க முயல்வார் .....


Bye Pass
பிப் 21, 2025 19:57

MGR பொதுக்கூட்டங்களில் பலமணி நேரம் தாமதமாக செல்வது வழக்கம் ... கூட்டத்தை கட்டுக்கோப்பாக சிதறாமல் இருக்க வடிவேலு ரேஞ்சுக்கு காமெடி பேச்சாளர்களும் மார்கெட்டு போன நடிகைகளும் மேடையில் மைக்கை சமாளிப்பார்கள் ..இவர் என்ன பாணியை கடைபிடிப்பாரோ


Murugesan
பிப் 21, 2025 20:20

எம் ஜிஆர் இல்லை என்றால் திருடர்கள்முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா


எவர்கிங்
பிப் 21, 2025 18:47

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப் போகட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை