உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கிராமங்கள்தோறும் ஊர் திருவிழா: ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து பிரசாரம்

தமிழக கிராமங்கள்தோறும் ஊர் திருவிழா: ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக கிராமங்கள்தோறும், 'ஊர் திருவிழா' நடத்தி, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' நன்மைகள் குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்யப்பட உள்ளது. நாடு முழுதும் லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கையாக உள்ளது. கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தது முதல், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், வரும், 2029 லோக்சபா தேர்தலுடன், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அதற்கு, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து, நாடு முழுதும் மக்களிடம் ஆதரவு திரட்டவும், அதன் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவும், தேசிய, மாநில அளவில், பா.ஜ., நிர்வாகிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழக குழுவின் அமைப்பாளராக முன்னாள் கவர்னர் தமிழிசை, இணை அமைப்பாளர்களாக தமிழக பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழு சார்பில், சென்னை, மதுரையில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இவற்றில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 26ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடந்த கருத்தரங்கில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியை அர்ஜுனமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஊர் திருவிழா நடத்தி, ஒரே நாடு; ஒரே தேர்தல் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குழு இணை அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி செய்து வருகிறார். கிராமங்கள்தோறும் நடத்தப்பட உள்ள ஊர் திருவிழாவில், ஒயிலாட்டம், மயிலாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இத்திருவிழாவிற்கு வரும் மக்களிடம், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் எடுத்துரைக்கப்பட உள்ளன. முதல் நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதியான, திருநெல்வேலியில் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஜாங்கிரி
மே 29, 2025 19:42

இதுக்கும் நாலு பார்லிமெண்ட் குழுவை அனுப்பலாமே. ஓ இது வெளிநாடு ட்ரிப் இல்லியா?


xyzabc
மே 29, 2025 12:15

திராவிட செம்மல்களுக்கு தெரிந்த விஷயமே இதில் ஸ்டிக்கர் ஓட்ட சான்ஸ் இல்ல என்று.


Rengaraj
மே 29, 2025 11:19

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மாறுவதற்கு முன்னால் நடைமுறை சிக்கல்களை கையாள நிறைய மாற்றங்களை கொண்டு வரவேண்டும். இங்கெல்லாம் கெஞ்சி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அதிரடி மாற்றங்கள் நடக்கவேண்டும். ஆதார், வாக்காளர் அடையாள எண் இவற்றை இணைக்கவேண்டும். வோட்டுப்போடாத வாக்காளர் அடையாள எண்களையும், அதனுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணையும் தேர்தல் கமிஷன் பொதுவெளியில் இணையதளம் மூலம் வெளியிட வேண்டும். வோட்டு போடலேன்னா அரசாங்க உதவிகள் ஏதும் கிடையாது, ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும். ஓட்டுபோடாததன் காரணத்தை தேர்தல் கமிஷனுக்கு ஆன்லைன் மூலம் தெரிவிக்க சொல்லி கட்டாயப்படுத்தலாம். பணக்காரர்கள், ஒரு சில வணிகர்கள், புலம் பெயர்ந்தோர் அந்த நாளில் வோட்டு போடுவது கிடையாது. எனவே அவர்கள் பான் கார்டு , ஆதார் இவை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ , அங்கு வோட்டுப்போடாததன் காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி பணிக்கலாம். வோட்டு போடாதவர்களை இப்படி செய்யசொல்வதன் மூலம் அவர்களும் நாளடைவில் கட்டாயமாக வோட்டுப்போடுவார்கள்.


Padmasridharan
மே 29, 2025 09:49

வோட்டு நாள் சொன்னா வோட்டு போட்டுட்டு போறோம். ஒரே நாடு ஒரே தேர்தலப் பத்தி நடவடிக்கைகள் எடுக்கும்போது ஒரே நாடு ஒரே IPCs என்று மாற்றம் கொண்டு வந்தாலும் நன்று. NOTA வில் பதிக்க வோட்டு போடுவதற்கு செல்வதற்கு பதில் யாருக்கேனும் வோட்டை போட்டு அதை மதிக்க செய்யலாமே. .


Appan
மே 29, 2025 08:21

நாடு வளர அந்த நாட்டின் அரசியல் அமைப்பு, அதை வழி நடத்துபவர்கள் திறமை, உள்ளவர்களாக இருக்க வேண்டும். பிஜேபி ஆட்சியில் எல்லாம் தலைகீலாக உள்ளது. நாட்டின் முக்கிய தலைவர் ஜனாதிபதி. பிஜேபி வாயையே திறக்காத ஆமாம் சாமியை ஜனாதிபதி ஆக்கி நாட்டிடை சர்வாதிகார போக்கிற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்திய சரித்திரத்தில் ஒரே நாடாக இருந்தது இல்லை. இந்திய ஐரோப்பா போல் பல நாடுகள் உள்ளதேசம். இதை அறிந்து செயல் படாமல் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சாப்பாடு, ஒரே மதம், ஒரே தேர்தல் ...என்ற பல ஒவ்வாத செயல்களை பிஜேபி செய்கிறது. பொருளாதாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் செயல் பட்டால் நல்லது .


Keshavan.J
மே 29, 2025 10:19

பொருளாதாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் செயல் படவில்லை ஆனால் 2014இல் 10 ஆவது இடத்தில இருந்த இந்தியா இப்போது 4ஆவது இடத்திற்கு வந்திருக்கிறது. இதை உன் அப்பா ஸ்டாலின் தான் செய்தார் என்று முட்டு கொடு. உங்களை போல் ட்ராவிடிய ஆளுங்க இருப்பதால் தான் டாஸ்மாக் வியாபாரம் சூப்பரா ஓடுது. நல்ல குடிச்சு அழிந்து போங்கோ. இன்னொரு விஷயம் உங்க அப்பாவோட அப்பா ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரித்தார் தெரியுமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை