உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரம் - தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை திட்டம்: டெல்டா மக்களின் கனவு நிறைவேறுமா?

விழுப்புரம் - தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை திட்டம்: டெல்டா மக்களின் கனவு நிறைவேறுமா?

விருத்தாசலம்; விழுப்புரத்தில் இருந்து கடலுார் வழியாக தஞ்சாவூர் வரை, இரட்டை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, டெல்டா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மார்க்கமாக மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் என, தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சிக்னல், கிராசிங் பிரச்னை ஏதுமின்றி எதிரெதிர் திசைகளில் ரயில்கள் எளிதில் செல்கின்றன. தலைநகருக்கும் குறித்த நேரத்தில் வந்து செல்ல முடியும் என்பதால், இந்த ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.

49 கி.மீ., இரட்டை பாதை

இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து கடலுார், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை கடந்து, மற்றொரு மார்க்கத்தில் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் செல்கின்றன.

அதில், தஞ்சாவூர் - திருச்சி பொன்மலை இடையே, 49 கி.மீ.,க்கு, 2019ம் ஆண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால், விழுப்புரத்தில் இருந்து கடலுார் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் இடையே, 40 கி.மீ.,க்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவில்லை.இதனால், ஒருவழி பாதையில் எதிரெதிர் திசைகளில் ரயில்கள் வரும் போது, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, பின் புறப்பட்டு செல்வதால் நேர விரயம் ஏற்படுகிறது. மேலும் ஒருவழி பாதையில் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன.கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் சாகுபடி செய்யப்படும், முந்திரி, பலா போன்றவை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கூடுதல் வருவாய்

அதேபோல, கடலுார் துறைமுகத்தில் இருந்து மத்தி, ஷீலா, வஞ்சரம் உட்பட பல்வேறு வகை கடல் மீன்களும் அதிகளவு ஏற்றுமதியாகின்றன. சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து அதிகமாக உள்ள டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் இரட்டை ரயில் பாதை அமைப்பதால் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R K Raman
பிப் 12, 2025 14:24

குறிப்பாக வாராந்திர ரயில்கள் மிகவும் தாமதமாக ஓடுவது இதனால் தான்


VEERAKUMAR T L
பிப் 12, 2025 11:12

Government of Tamil Nadu, all the Members of Parliament from Tamil Nadu, Former Governors of States who hail from Tamil Nadu, Ministers at the Union Government who hail from Tamil Nadu and other Union Ministers who are stated to have Tamil Nadu as their link SHOULD MAKE REPRESENTAION TO THE UNION GOVERNMENT EITHER JOINTLY OR SEPARATELY DEMANDING IMPLEMENTATION OF DOUBLING THE RAIL TRACK BETWEEN VILUPPURAM AND THANJAVUR. If a demand is made for the benefit of Tamil Nadu Delta Region We can hope Union Government may consider this. God Save and Bless people from Delta Region of Tamil Nadu.


R K Raman
பிப் 11, 2025 14:51

இது பலப்பல ஆண்டுகள் முன்பு பேசப் பட்டது. ஏனோ இன்னும் நடக்க வில்லை. ஆம்னி பஸ் பிழைக்க அப்போது மாயவரத்தில் ஜெயித்த ஐயர் என்பவர் உதவி செய்ய அகல ரயில் பாதை தயாராக இருந்தும் பல மாதங்கள் வரை செயல் படாமல் இருந்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்...இதுவும் அதுவும் ஒன்றா?


N Sasikumar Yadhav
பிப் 10, 2025 14:50

ஓசி வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய உறுப்பிடம் கோரிக்கை வைய்யுங்கள்


L BASKARAN
பிப் 10, 2025 10:41

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசின் எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது. ஓட்டு யாருக்கு போடுகிறீர்கள்


அப்பாவி
பிப் 10, 2025 09:53

தண்டவாளத்தப் பாரு... எப்போ பாத்தாலும் எதையாவது வாங்கி த்துண்ணுட்டு வெளியே குப்பைய வீசிற வேண்டியது. எவண்டா சுற்றம்.அண்ணுவாப்? ஜேபில வெச்சிக்கிட்டு வீட்டுக்குப்பைத் தொட்டில போடுங்கடா...


veeramani
பிப் 10, 2025 09:39

இந்திய பார்லிமென்டில் தமிழக எம் பிகள் அனைவரும் கோரிக்கை வைத்தால் இந்த இரட்டை ரயில்பாதை போடப்படலாம் .


Kasimani Baskaran
பிப் 10, 2025 05:36

கேன்டீன் போகும் அந்த நாற்பதின் கடும் உழைப்பில் வந்த நல்ல பலன் என்று யாரும் சொல்லவில்லை...


சமீபத்திய செய்தி