உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏரிகள் உடைப்பு தத்தளிக்கும் விழுப்புரம்; ரயில்கள் பாதியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

ஏரிகள் உடைப்பு தத்தளிக்கும் விழுப்புரம்; ரயில்கள் பாதியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளை அழைத்து வர சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து செல்லப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y0w61oz6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெள்ள நீர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கரைபுரண்டோடியதால், பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டது. ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விழுப்புரம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் பகுதிகளில் இருந்தும் பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால், சென்னை- தென் மாவட்டங்களுக்கு இடையிலான 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 14:46

ரயில்வே யைக் கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசின் முன்னேற்பாடுகள் இல்லாததால் மாநில அரசு செயலில் இறங்கியதற்குப் பாராட்டுக்கள்.


Nandakumar Naidu.
டிச 02, 2024 17:14

உங்கள் ஊராட்சி அரசிடம் அனுமதி பெற்று நீங்கள் போய் இரயில்வே மந்திரியாகி மழையை தடுத்து நிறுத்தியிருக்கலாமே வாயால் வடை சுடும் வீரரே. இந்த சேதாரம் இருந்திருக்காது.


MARI KUMAR
டிச 02, 2024 12:51

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்