உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள்: கவர்னர் ரவி வேதனை

சமூக நீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள்: கவர்னர் ரவி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய கீதம் பாட வலியுறுத்தினார். சபையில், அ.தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக, கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.தேசிய கீதம் பாடப்படாத நிலையில், சபையில் இருந்து கவர்னர் வெளியேறினார். 'கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். 'இத்தகைய ஆணவம் நல்லதல்ல' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று (ஜன.,13) ஓசூரில் நடந்த வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 60 ஆண்டுகளாக இரவும், பகலும் சமூக நீதி பேசும் தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன. இன்றளவும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர். ஆனால் வள்ளலார் மீட்டார். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Suresh sridharan
ஜன 14, 2025 00:14

தலித்துக்கு எதிரா வன்முறை நடந்தால் தான் எங்க தி ரு வளவன் அப்பத்தான் அவருக்கு பாக்கெட்டு நிறையும் அப்படின்னு யாரோ சொன்னாங்க


sankaranarayanan
ஜன 13, 2025 21:04

முதலில் அமைச்சர்களே கூட இருக்கும் தளித் அமைச்சர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை அவர்களை உட்காரவைத்து பேசாமல் நிற்க வைத்துத்தான் பேசுவார்கள் அதுவும் அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு எஜமானர் விசுவாசம் போல நடிக்க வேண்டு என்று எதிர்பார்பார்ப்பார்கள் அவர்களுக்கு எல்லா இடத்திலும் முன்னுரிமை கிடையாது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலாக்காக்களே அற்ப இலக்காவாகத்தான் இருக்கும் இதுபோன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது ஏன் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி அல்லது உள்துறை இலாக்கா அல்லது தொழில் இலாகா அல்லது நகர்ப்புற முன்னற்றம் அல்லது நிதி இலாகா இன்னும் இப்படி பல பல உள்ளன ஏன் இந்த இலாக்காக்களுக்கு அவர்கள் தகுதி இல்லையா பிறகு அவர்களுக்கு என்னவோ இவர்கள்தான் அவர்களை தூக்கி தாங்கி பிடித்துக்கொண்டு இருப்பதுபோன்ற பாவனை நடிப்புதான் இருக்கின்றன


ஆரூர் ரங்
ஜன 13, 2025 19:22

குஜராத்,பிகார், உ.பி,ம பி யில் BC,SC, ST பெண்கள கூட முதல்வராக இருந்திருக்கிறார்கள்.படித்த கேரளா, கர்நாடகா, புதுவை, தமிழகத்தின் முதல்வராக கனவு கூட காண முடியாது. நிஜமாகவே வடக்கு வளர்ந்துள்ளது.


Sudha
ஜன 13, 2025 18:59

சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து விளக்கம் கேட்கவோ ஆணை பிறப்பிக்க வோ செய்யாமல் வயதான மாமியார் மாதிரி புலம்புவது ஏன்? வேறு மாநிலத்தில் சென்று மதிப்பு மரியாதையோடு வாழலாம் அல்லவா?


krishna
ஜன 13, 2025 20:28

ENNA 200 ROOVAA OOPIS CLUB BOYS KALAIKKA VENUMA.SUDHA INI PENGAL OOPIS CLUB THALAI BOYS CLUB VAZHAKKAM POLA VAIKUNDESWARAN. VAAZHTHUKKAL.


அப்பாவி
ஜன 13, 2025 18:59

பிரிட்டிஷ்காரங்க சமஸ்கிருதற்றை அழிக்கப் பார்த்தனதர். வள்ளலார் அதை மீட்டார். இது என்ன புது உருட்டலா இருக்கு? வள்ளலார் என்னென்ப சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுதினார்? முத்திப் போச்சுன்னு நினைக்க றேன்.


arumugam
ஜன 13, 2025 18:31

பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள் முதலாளி


GMM
ஜன 13, 2025 18:24

ஆடு மாடுகள் வெட்டப்படுவதை குறைத்து வளர்ப்பை அதிகரிக்க வேண்டும் . அமெரிக்க வெண் பன்றி பண்ணைகள் மானியம் , நிதி கொடுத்து விரும்பும் தலித் மூலம் உருவாக்க வேண்டும். ஒரு மதத்தினர் தவிர சில இந்து, கிருத்துவ மக்கள் மாமிச உணவாக ஏற்று கொண்டனர். ஆடு, மாடு வளர்ப்பில் பண்ணைகள் அமைப்பு மூலம் தலித் வருவாய் எட்ட முடியும். இருப்பிட தேவைக்கு பிள்ளையில்லாத இந்து சமூக சொத்து இந்து தலித் குடியிருப்பிற்கு என்று சில சமூக மக்கள் எழுதும் பழக்கத்திற்கு வர வேண்டும். இதன் மூலம் சமூக வறுமை, தலித் எதிராக வன்முறை குறையும். திராவிட வளர்ச்சியும் குறையும்.


Laddoo
ஜன 13, 2025 18:20

என்னங்கோ த்ரவிஷ் மாடல் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா? சொரியார் பேர சொல்லி இங்கு வயிறு வளர்க்கும் போலி மணிகள பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா? சொரியார் ஒரு போகஸ் என்று உங்களுக்கு போட்டுக் குடுத்துட்டாங்களா? அய்யகோ உடன்பருப்பே நாம பொத்தி பொத்தி பாதுகாத்த ஒவ்வொரு பொய்யும் வெளியே உலா வந்துடுச்சா


Svs Yaadum oore
ஜன 13, 2025 17:14

வடக்கன் படிக்காதவன் ஹிந்திக்காரன் என்று விடியல் திராவிடனுங்க கூவும் உத்தர பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே 1995இல் மாநில பெண் முதல்வர் மாயாவதி ..அப்போது அவர் வயது 39 தான் ..20 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். ....ஆனால் முன்னேறிய ராமசாமி மண்ணில் அடுத்த 50 வருடங்கள் ஆனாலும் இங்கு தலித் முதல்வராக முடியாது ...அப்படியே வந்தாலும் நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்லி விடியல் கேவலப்படுத்துவானுங்க ...


T.sthivinayagam
ஜன 13, 2025 16:39

ஏன் பீகாரில் சமுகநீதி பேசுவது இல்லையா


புதிய வீடியோ