மேலும் செய்திகள்
மனித, விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்தது வனத்துறை
6 minutes ago
சென்னை: தமிழகத்தில், 6.34 கோடி வாக்காளர்களின் விபரங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், 2026 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. வரும், 11ம் தேதியுடன் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 6.40 கோடி பேருக்கு, கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இப்பணிகள், 99.8 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட 6.34 கோடி படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இப்பணிகள், 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தமிழகத்தை விட கேரளா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், 'ஆன்லைனில்' பதிவேற்றும் பணிகள் சற்று மந்தமாகவே நடந்து வருகின்றன. கேரளாவில், 96.8 சதவீதம், உத்தரபிரதேசத்தில், 95.7 சதவீதம் மட்டுமே பணிகள் முடிந்துள்ளன என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
6 minutes ago