உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர்கள் விளக்கம் கொடுக்க தயாரில்லை; தேர்தல் கமிஷனால் தொடர்கிறது குழப்பம்

வாக்காளர்கள் விளக்கம் கொடுக்க தயாரில்லை; தேர்தல் கமிஷனால் தொடர்கிறது குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவணங்கள் கேட்டு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி வரும் நிலையில், பெரும்பாலான வாக்காளர்கள், விளக்கம் கொடுக்க தயாராக இல்லாததால், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குழப்பம் தொடர்கிறது. தமிழகத்தில், மூன்று மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதற்காக வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d3b90ovm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாக்காளர் பட்டியலில் இருந்து, 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். தற்போது, 5.43 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். கணக்கெடுப்பு பணியை, பல இடங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளிடம் விண்ணப்பங்கள் மொத்தமாக வழங்கப்பட்டன. அவர்களிடம் அரைகுறையாக பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பெயரும், பட்டியலில் இடம் பெற்றது. மொத்தம், 12.43 லட்சம் வாக்காளர்கள், போதிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை. தகுதியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றால், அவர்களையும் நீக்கவேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் உரிய ஆவணங்களை, பிப்.,10ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அலுவலர்கள் நிர்ணயிக்கும் நாளில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷன் நோட்டீசை பெற்ற வாக்காளர்களில் பெரும்பாலானோர், விளக்கம் கொடுக்க தயாரில்லை. இது குறித்து, வாக்காளர்கள் சிலர் கூறியதாவது: விண்ணப்ப படிவத்தில், 2002, 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், எந்த ஊரில் பெயர் இருந்தது என்று தெரியாததால், விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதை ஏற்க முடியாது என்றால் நிராகரித்திருக்கலாம். நாங்கள் சிறப்பு முகாமில், புதிதாக விண்ணப்பம் அளித்திருப்போம். தற்போது நோட்டீஸ் பெற்று, உதவி தேர்தல் அலுவலர் அலுவலகம் சென்றால், அவர் இல்லை பிறகு வாருங்கள் என்று அலைக்கழிக்கின்றனர். இதன் காரணமாகவே, பலர் விளக்கம் அளிக்காமல், புதிதாக விண்ணப்பம் கொடுக்கின்றனர். ஏராளமானோர் விண்ணப்பம் கொடுக்கும் நிலையில், தேர்கல் கமிஷன் முறையாக கள ஆய்வு செய்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் குழப்பம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர். இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் 7.17 லட்சம் மனுக்கள் குவிந்தன தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், பிப்.,17ல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க கோரி, நேற்று வரை 7.28 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. கடந்த 27, 28ம் தேதி நடந்த, வாக்காளர் சிறப்பு முகாமில், 7.17 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக, கோவையில், 50,813; மதுரையில் 49,551; சேலத்தில் 41,557; செங்கல்பட்டில் 38,124 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு மட்டும் 5.58 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. ***

கூவி அழைக்கும் அதிகாரி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை: வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மற்றும், 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள், படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன்தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு, ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க, படிவம் 7 வாயிலாக விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்தல், மாற்று திறனாளி வாக்காளர்கள் என அடையாளப்படுத்துதல் போன்றவற்றுக்கு, படிவம் - 8 வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
டிச 30, 2025 20:25

உண்மையான வாக்காளராக இருந்தால்.... இதற்க்கு முந்தைய இரண்டு தேர்தல்களில்..... அதாவது 10 ஆண்டுகளில் எந்த தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே..... இருந்தால் தானே சொல்வர்கள்.... அவர்கள் எல்லாம் சமீப காலங்களில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஊடுருவியுள்ள ஆட்களாக இருக்கலாம்..... அப்படி இருந்தால்.... தேர்தல் ஆணையம் கேட்கும் தகவல்களை எப்படி கொடுக்க முடியும் ?


Ganesan
டிச 30, 2025 19:18

நேற்று முன்தினம் என்ன சாப்பிட்டோம் சொல்லு பார்க்கலாம்? .இதற்கு சப்போட்டு வேற


பெரிய குத்தூசி
டிச 30, 2025 18:47

SIR நல்ல விஷயம். ஆனால் தேர்தல் துறை தற்காலிக ஊழியர்களை இந்த பணியில் அமர்த்தி, சரியான முறைகளை சொல்லிக்கொடுக்காமல் தற்காலிக ஊழியர்கள் லூட்டி அடிப்பது கொடுமையாக உள்ளது. இப்பவும் நிறைய போலி, மற்றும் பங்களாதேஷ் ஆட்களை திமுக உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவோடு சேர்த்து உள்ளார்கள். எங்கள் ஏரியா வில் 10 க்கு மேற்பட்ட முடிதிருத்தும் பங்களாதேஷ் மற்றும் ரொஜிஞ்சா முஸ்லீம்கள் உள்ளனர். அவர்கள் வாயாலே ரோஹிஞ்சா என கூறுகின்றனர். அவர்கள் உபி மாநில ஆதார் வைத்துள்ளார், தமிழ்நாட்டின் ரேஷன் கார்டு உள்ளது. இப்போது உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையோடு வோட்டர் கார்டு ம் பெற்று உள்ளார்கள். லோக்கல் போலீஸ் க்கும் இவர்களை பற்றி தெரியும். பல பெட்டிஷன் போட்டாயிற்றுக்கு. ஒன்னும் பிரயோதனம் இல்லை. நம்மை விட இந்த ஊடுருவல் காரர்கள் திமுக அரசியல்வாதிகளின் ஆதரவோடு நெஞ்சை நிமித்திக்கிட்டு போறான். கலிகாலம்.


Mahadevvan
டிச 30, 2025 13:29

One of my collegue who is staying in bangalore is voter id in chennai and he is telling this with proud. SIR should be strictly implemented and if necessary documents not submitted should remove them. He is also his name in Ration card in both places.


Sree
டிச 30, 2025 13:12

Amir Tha டிச 30, 2025 10:54 2002 இல் எங்கு ஒட்டு போட்டுயிர்கள்.அதனுடைய வரிசை என் அண்ட் பாகம் என் வேண்டும்..நான் எங்கா செல்வது...ஜனநாயக போடுக்கொலை . 2002 யில் எங்கு ஒட்டு போட்டேன் என தெரியாதாம் .இலவச ஜந்துக்கள் உள்ள தமிழ்நாட்டை ஆக்கிய பெருமை திமுக சேரும். அரசு செலவில் இலவசமா டிவி கொடுத்து அதில் மாத சந்தா வசூலித்து கோடியில் கொள்ளை அடித்த கும்பல்.


Kalyanaraman Andhukuru.R.
டிச 30, 2025 17:34

இலவச டிவி எப்பொழுது எந்த ஊரில் வாங்கினார்கள் என்று கேட்டால் சரியாக செல்வார்கள்.


தத்வமசி
டிச 30, 2025 11:28

இப்போது ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்கச் சொல்கிறார்கள். அது போல ஆதார் அட்டையை ரேசன் கார்டுடன் இணைக்கச் சொல்கிறார்கள். வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம் முதலிய அட்டைகளை ஒன்றிணைத்து ஒரே அட்டையாக வழங்க வேண்டும். அப்போது பல குழப்பங்கள் தீரும். வெளிநாடுகளில் நமது மக்கள் சென்று வசிக்கும் போது ஆதார் அட்டை போன்று ஒரு அட்டை தரப்படும். அதிலேயே ஓட்டுனர் உரிமம், வங்கி பயனாளர் அட்டை என்று அனைத்துக்கும் ஒரே அட்டை தான். அது குடிமகன்/நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அது. நாட்டை விட்டு விட்டு வந்த பிறகு மீண்டும் பல வருடங்கள் கழித்துச் சென்றாலும் அதே எண்ணைத் தான் மீண்டும் கொடுப்பார்கள். இதுவே இன்சுரன்ஸ், வங்கி என்று எல்லாவற்றிலும் பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். அங்கெல்லாம் உரிமை என்றெல்லாம் பேச முடியாது. அந்த நாட்டின் பிரஜைகள் அதை விமரிசனம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் எதற்க்கெடுத்தாலும் விமரிசனம் செய்வது வாடிக்கையாக இருக்கிறது. எதிர்கட்சியாக இருக்கும் போது இவர்கள் சொல்வதை அரசு கேட்க வேண்டும் என்று கொடி பிடிப்பார்கள், அடாவடி செய்வார்கள், தேவையில்லாமல் போராட்டம் செய்வார்கள். ஆளும் கட்சியாக மாறியவுடன் அதே வாயால் நாங்கள் ஆளும் கட்சி, எங்களைத் தான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அடாவடி செய்து, அடம் பிடிப்பார்கள்.


தத்வமசி
டிச 30, 2025 11:18

திராவிட மாயையில் இருப்பவர்கள் விளக்கம் ஏன் கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்பார்கள். தேவையாக சேர்த்து இருப்பார்கள். மக்களே இல்லாமல் மக்களை சேர்த்து வைக்கும் திறமை திராவிடத்திடம் காணலாம். ஒரே வீட்டில் பல நூறு வாக்காளர்கள் இருக்கும் அற்புதம் தமிழகத்தில் நடக்கும். கேட்டால் சரியாக பதில் சொல்லமாட்டார்கள். விவரம் கொடுக்காதவர்களை சேர்ப்பதில் நியாயமில்லை. அவர்கள் போலி வாக்காளர்கள். அவர்களால் எப்படி விளக்கம் தர இயலும் ?


Rajamani K
டிச 30, 2025 10:58

எனது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு வீடு முகவரி மாறியபின் பழைய 2010க்குப் பின் அதை மாற்றிய போது புதிய வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தார்கள். நானும் 2007 வரை வெளிநாட்டில் இருந்ததால், பிறகு, 2010 குப் பின் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்று, தேர்தல் களில் வாக்களித்தோம். 2002 முன்பு வாக்களிக்கவில்லை. பழைய அட்டையும் இல்லை. இப்போது ஏன் இந்த புதுக் குழப்பம்.


Amir Tha
டிச 30, 2025 10:54

2002 இல் எங்கு ஒட்டு போட்டுயிர்கள்.அதனுடைய வரிசை என் அண்ட் பாகம் என் வேண்டும்..நான் engaa செல்வது...ஜனநாயக podukolai


Karunai illaa Nidhi
டிச 30, 2025 11:35

இங்கே படுகொலை னு கமெண்ட் போட்ட நேரத்தில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் போயி பழைய வாக்காளர் பட்டியலில் பார்த்து இருக்கலாமே பாயி


GOPAL MURALI
டிச 30, 2025 10:51

தவறான தகவல் தருபவர்களை தயவு செய்து நீக்கவும். உரிய ஆவணம் இல்லமால் எப்படி இங்கே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். முதலில் இறப்பு சான்றிதல் கொடுக்கும் முன் ரேஷன் கார்டு ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியல் பெயரை நீக்குங்கள் இந்த அடிப்படை செயலை கூட செய்யமுடியாதா.அணைத்து செயலிகளையு ம் முதலில் ஒன்று சேருங்கள்.


சமீபத்திய செய்தி