மேலும் செய்திகள்
தமிழகத்தில் அமலானது டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம்!
3 hour(s) ago
குரியன் ஜோசப் குழுவை முடக்கும் தவெக அரசு: உதயநிதி புகார்
3 hour(s) ago | 1
செங்கோட்டையன் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!
6 hour(s) ago | 1
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா இன்று நடப்பதை முன்னிட்டு அதிகாலை முதல் இரவு வரை நடைசாத்தப்படுகிறது.தெப்பத்திருவிழா ஜன., 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதுரை சிந்தாமணியில் கதிரறுப்பு விழாவில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினர். இன்று மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் காலை 10:40 மணி முதல் 11:04 மணிக்குள் எழுந்தருளுகின்றனர். காலையில் இரு சுற்றுகளும், இரவு 7:00 மணியளவில் ஒரு சுற்றும் தெப்பக்குளத்தைச் சுற்றி தெப்பம் வலம் வருகிறது. இன்று அதிகாலையிலேயே அம்மனும், சுவாமியும் கோவிலில் இருந்து புறப்பட்டு, இரவு திரும்புகின்றனர். அதுவரை நடைசாத்தப்பட்டிருக்கும்.
3 hour(s) ago
3 hour(s) ago | 1
6 hour(s) ago | 1