உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் சொத்துக்களை பாதுகாக்க வக்பு சட்டத்தை திருத்த வேண்டும்: ஷோபா

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வக்பு சட்டத்தை திருத்த வேண்டும்: ஷோபா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : “வக்பு வாரிய திருத்தச் சட்டம் வந்தால் மட்டுமே, ஹிந்து கோவில் சொத்துக்கள் கூட பாதுகாக்கப்படும்,” என, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6gr098yg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருச்சி மாவட்டம், திருச்செந்துறை உட்பட பல கிராமங்களில், ஹிந்து கோவில் மற்றும் தனியார் நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என அறிவிக்கப்பட்டதால், நில உரிமையாளர்கள் பத்திரம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நில உரிமையாளர்கள் தரப்பிலும், தமிழக பா.ஜ., சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று திருச்சி வந்தார். பின், திருச்செந்துறை கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள சந்திரசேகர சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்தார். திருச்செந்துறை கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான நிலங்கள், வக்பு வாரியத்துக்குச் சொந்தமானவை என அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராமத்தில் நிலம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராடி வருகின்றனர்.அவ்வியக்கத்தவர் நேற்று நடத்திய கூட்டத்தில், ஷோபா கரந்தலாஜே பங்கேற்று பேசினார். அந்த கிராமத்தில், வக்பு வாரியத்துக்கு நிலத்தை பறி கொடுத்தவர்களையும் சந்தித்து பேசினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

நாடு சுதந்திரம் அடைந்த பின், நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அப்போது, சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தான் வக்பு வாரியத்திற்கு சொந்தமானவையாக இருந்தன. அதன்பின், ஏராளமான நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன. தற்போது, 38 லட்சம் ஏக்கர் நிலம், வக்பு வாரியத்திற்கு சொந்தமாக உள்ளன.கடந்த 1,300 ஆண்டுகளுக்கு முன், பராந்தக சோழனால் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோவில் நிலம் கூட, வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறத் துவங்கி உள்ளனர். அந்நிலையை மாற்றத் தான் சட்டப் போராட்டம் நடத்துகிறோம்.கடந்த 1995ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், நான்கு பேர் சேர்ந்து கோரிக்கை வைத்தாலே, குறிப்பிட்ட நிலத்தை அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.பெங்களூரில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய 3.5 ஏக்கர் நிலத்தை, வக்பு வாரியத்துக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.அதேபோல், சட்டப்பிரிவு 83 மற்றும் 85ன்படி நிலம் தொடர்பான விவகாரத்தை, நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் சமுதாயத்தினர் பொறுப்பு வகிக்கும் தீர்ப்பாயத்திற்கு கொண்டு சென்று தான் தீர்வு பெற வேண்டும். நிலத்தை ஆக்கிரமிக்கும் சமுதாயத்தினருக்கு எதிராக நியாயம் கேட்டு, அதே சமுதாயத்தினர் இடம் பெற்று உள்ள தீர்ப்பாயத்திற்கு கொண்டு சென்றால், எப்படி நியாயம் கிடைக்கும்?ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் குவிந்துள்ள தீர்ப்பாயத்தில், ஒன்றுக்குகூட இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதுவரை, 1 ஏக்கர் நிலத்தை கூட திரும்ப பெற முடியவில்லை. அதனால் தான், சட்டப் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, விவசாய நிலங்களுக்கும், கோவில் நிலங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். திருச்செந்துறை கிராமத்தில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவித்தவர்களுக்கு, இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.கோவில் சொத்துக்கள், நகைகள் தேவையென கருத்தும் மாநில அரசு, ஹிந்து கோவில்களுக்கான சொத்துக்களை பாதுகாக்க வேண்டாமா?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

PNA sirajudeen
நவ 21, 2024 08:25

வக்குப் சொத்து என்பது அந்தக் காலத்தில் உள்ள அரசர்கள் மூலமாகவே அதிகமாக பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிகமாக கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் இதில் ஒரு நபர் கூட ஒரு நபர் கூட மாற்று மததவர்கள் கொடுக்கவில்லை இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் 38 லட்சம் ஏகர்க அரசாங்கம் படி உள்ளது அனைத்தும் தர்மமாக மக்கள் பயன்பாட்டிற்காக முஸ்லிம்களால் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் உள்ள கோயில்கள் முஸ்லிம்களாலே கட்டப்பட்டது அந்த காலத்தில் இந்த மாதிரி வேறுபாடு இல்லை. இது அனைத்தும் மக்களால் தர்மம் செய்யப்பட்டது மக்கள் பயன்பாட்டிற்காக இப்போ உள்ள பிரச்சனை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு அவைகள் தான் அரசியலா மாற்றப்பட்டு வருகிறது.


K V Ramadoss
நவ 19, 2024 19:15

இதற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டும்.


Subash BV
நவ 19, 2024 19:10

MUSLIM BASED CONGRESS AMENDED WAQT ACT SEVERAL TIMES AND GAVE SPECIAL POWERS, WHICH WAS NOT AVAILABLE TO ANY INSTITUTIONS INCLUDING NATIVE HINDUS TEMPLE ENDOWMENT BOARD. TAMILS DECIDE YOURSELF


Jay
நவ 19, 2024 15:28

2013 காங்கிரஸ்+ திமுக கொண்டு வந்த வகுப்பு வாரிய திருத்தம் பற்றிய விவரங்களை படித்து அறிந்தவர்கள் காங்கிரஸ் திமுகவிற்கு வாழ்நாளில் ஓட்டு போட மாட்டார்கள்.


sugumar s
நவ 19, 2024 12:21

it is the need of the hour to ensure control on properties owned by Waqf board. New registrations by State Govt should be put under severe scanner. any unauthorized purchase or registration should have severe punishment. The rate at which it is going is very bad. if the same trend continues very soon Waqf board may whole of India belongs to them.


Sivagiri
நவ 19, 2024 12:09

அதைவிட , அதிக அதிகாரம் கொண்ட , அதைவிட வலுவான , கோவில்கள் பாதுகாப்பு / பராமரிப்பு - சட்டம் என்ற , சட்டத்தை கொண்டு நாடு முழுவதுக்குமான கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் . .. கல்வியை மத்திய / மாநில பொது பட்டியலில் இருப்பது போல, மத்திய அரசில் , ஹிந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி , அனைத்து மாநில அறநிலைய துறைகளையும் அதன் கீழ் கொண்டுவந்து , கண்ட்ரோல் செய்தால்தான் இனி கோவில்களும் சொத்துக்களும் பிழைக்கும் . . .


sridhar
நவ 19, 2024 12:03

கோபாலபுரம் , அல்வார்ப்பேட்டை மற்றும் வேளச்சேரி சொத்துக்களை வக்ப் கேட்டால் தூக்கிகொடுத்துவிடலாம் .


Rasheel
நவ 19, 2024 11:52

நாம் ஒருவனை வாடகைக்கு வைக்கிறோம். அவன் வீடு வாடகை தரவில்லை. பிரச்சனை செய்கிறான். காலி செய்யும் நேரத்தில் வக்ப்க்கு டொனேட் செய்து விட்டால். வீடு உரிமையாளன் நிலை காலி. அடுத்த முப்பது வருடம் கோர்ட்டுக்கு அலைந்து சாக வேண்டியது தான். இது தான் காங்கிரஸ் 1995ல் கொண்டு வந்த சட்ட திருத்தும். இது இரண்டாவது பாகிஸ்தானை உண்டாக்கும் சட்டம்.


Rasheel
நவ 19, 2024 11:41

கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 1400 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கோவில் எப்படி 1000 வருடங்களுக்கு பின்னால் வந்த படை எடுப்பாளர்களுக்கு சொந்தமாக முடியும்


Anand
நவ 19, 2024 10:55

வக்பு வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இரண்டையும் களைக்கவேண்டும். இவைகளால் நம் நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும், ஹிந்துக்களுக்கும் பெரிய இழப்பு...


முக்கிய வீடியோ