உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடர்ந்து நடக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சக ஆலோசனையின்படி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் போன்றவற்றில், சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர் பாதுகாப்பு ஒத்திகை, கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் துாத்துக்குடி துறைமுகம், அனல்மின் நிலையம் போன்றவற்றில், விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பயிற்சி நடந்தது. ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம், முதலுதவி தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில், அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். வாரத்தின் இரண்டாம் பாதியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஒத்திகை பயிற்சி நேரடியாக நடத்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியை, மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும். இப்பயிற்சி, முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒத்திகை மட்டுமே. மற்ற இடங்களில் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து, பொதுமக்கள் எவ்வித பதற்றமோ, அச்சமோ கொள்ள தேவையில்லை என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S.L.Narasimman
மே 12, 2025 11:13

அங்கேதான் போர்நிறுத்தம்ன்னு சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன ஆளில்லாத கடையிலே டீ ஆத்தரீங்க விடியலே.


Mecca Shivan
மே 12, 2025 09:08

குடுத்த காசுக்கு மேல கூவரது


Rajasekar Jayaraman
மே 12, 2025 08:15

எதையோ எதிர்பார்க்கிறது பாகிஸ்தானுக்கு அந்த கதி அங்கிருந்து வந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது கட்சிக்கு கேடுகாலம்.


Kalyanaraman
மே 12, 2025 08:15

மத்திய அரசிடமிருந்து வந்த பணத்திற்கு விடியல் கணக்கு காண்பிக்கவே இந்த அறிவிப்பு.


Kasimani Baskaran
மே 12, 2025 05:07

விடியல் ஆட்சியில் பொது மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்று சொல்வதைப்போல கோமாளித்தனங்கள் இல்லை. விடியல் கொள்ளை போதாது என்று நடமாடும் கொள்ளைக்கூட்டம் வேறு சுற்றித்திரிகிறது.


மீனவ நண்பன்
மே 12, 2025 03:52

டாஸ்மாக் கடை வாசலில் எடுத்த படமா ?


புதிய வீடியோ