உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருநாள் முன்பே சுதந்திர தின விழா தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

ஒருநாள் முன்பே சுதந்திர தின விழா தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழகம் முழுதும் பல்வேறு தனியார் பள்ளிகள், சுதந்திர தின விழாவை ஒருநாள் முன்னதாகவே கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆக. 15ல் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆக. 15 வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாளானது. இதனால், தமிழகம் முழுதும் பல்வேறு தனியார் பள்ளிகளில், ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஆக. 14 வியாழக்கிழமையே சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர் விடுமுறை, பள்ளி வாகனங்கள் ஒருநாள் இயக்குவதை தவிர்த்தல், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை நாளை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளிட்டவை, ஒருநாள் முன்னதாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன. ஆனால், இதற்கு சமூக ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திருப்பூரை சேர்ந்த தேசிய சிந்தனை பேரவை நிர்வாகிகள் கூறுகையில், 'ஒருநாள் முன்னதாக சுதந்திர தின விழாவை, கல்வி நிறுவனங்கள் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம்; தேசப்பற்று, சுதந்திரத்திற்காக உழைத்த தியாகிகளின் பெருமைகள் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் எடுத்துச்சொல்வதற்கு சிறந்த தினம், சுதந்திர திருநாள்தான். 'தற்போது சமூக வலைதளங்களில் குழந்தைகள் கூட மூழ்கி கிடக்கின்றனர். தேசத்தின் அருமை அவர்களுக்கு புரிவதில்லை. இதை உணர்த்த, பள்ளி நிர்வாகங்களுக்கு கிடைத்த வாய்ப்பை, பள்ளிகள் வீணடித்துவிடக்கூடாது. ஆக. 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவது போல் ஆகிவிடும். பள்ளி, கல்லுாரிகளில், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, அந்தந்த தேதிகளில், நாட்டு மக்களுடன் இணைந்து கொண்டாடப்பட வேண்டும்' என்றனர். திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் கேட்டபோது, ''நாட்டின் சுதந்திர தின விழாவை, ஆக. 15 அன்றும், குடியரசு தின விழாவை ஜன. 26 அன்று மட்டுமே கொண்டாட வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதுகுறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vasan
ஆக 16, 2025 12:49

Similarly release of films on 14th August, which is PAKISTANs independence day, should not be allowed.


உ.பி
ஆக 16, 2025 10:44

திங்கள்கிழமை விடுமுறையாக அறிவித்தால், எல்லாருக்கும் 15th சுதந்திர தினம் கொண்டாட வசதியாக இருந்திருக்கும்


राज्
ஆக 16, 2025 08:51

ஒரு நாள் முன்பே சுதந்திர சுதந்திர தின விழா கொண்டாட்டம் இதில் எதுவும் தவறு இல்லை மூன்று நாள் விடுமுறை வரும்போது அவர் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முனையில் என்ன தவறு வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் பொங்கல் பண்டிகை, விஜயதசமி பண்டிகை எல்லாம் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் முன்பாகவே அலுவலகங்களில் கொண்டாடுகிறார்கள் கல்லூரிகளில் கொண்டாடுகிறார்கள் அது மட்டும் பரவாயில்லையா.


தமிழ்வேள்
ஆக 16, 2025 08:34

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றுக்கு எதற்கு விடுமுறை? பள்ளி கல்லூரி தனியார் அரசு நிறுவனங்கள் அவசியம் கொடி ஏற்றி மரியாதை செய்வது கட்டாயம்..அன்றைய தினம் திரைப்படம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் கூடாது...வேலை அல்லது வழிபாடு இரண்டு மட்டுமே இருக்க வேண்டும்.... கூத்தாடித்தனம் தேசத்தின் மீதான பற்று & மரியாதையை கெடுக்கும்.


Ramesh
ஆக 16, 2025 07:26

இவங்க பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்பார்கள்.


Palanisamy Palanisamy
ஆக 16, 2025 07:12

நாளை சாப்பிடுவதை இன்றே சாப்பிடச் சொல்லுங்கள் அனைவரையும்.


Kasimani Baskaran
ஆக 16, 2025 06:54

ஒரு நாள் விடுமுறை கொடுப்பதை விட சுதந்திர தினத்தை கலாச்சாரம் மற்றும் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அமைத்து அடுத்த நாளை விடுமுறையாக கொடுக்கலாம்.


அஜய் இந்தியன்
ஆக 16, 2025 05:58

சிவகங்கை காரைக்குடி இல் பல பள்ளியில் சுதந்திர நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாட பட வில்லை. இதை மத்திய அரசு கவனிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் அரசியல்வாதிகளில் தலையீடு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தெரிந்து காரைக்குடியில் இப்படி நடக்கிறது என்பதை நினைத்து வருத்த பட்டாலும், இன்னும் தமிழகம் முழுவதும் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. இதை NIA, மத்திய அரசு கவனத்தில் எடுத்து செல்ல வேண்டும்.


Prabakaran J
ஆக 16, 2025 03:46

We are still educating educated...ithula enga erunthu uneducated karai serka porum..vidiyal govt governance.


ரங்ஸ்
ஆக 16, 2025 03:32

நாட்டுப்பற்று காற்றில் பறக்க விட்டுள்ளனர்