உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?...  அந்துமணி பதில்கள்

திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?...  அந்துமணி பதில்கள்

கே.ராஜாளி, வேலுார்:

பாரத பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்குமா?நம் பிரதமர் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக வைத்து, 'கருமமே கண்ணாயினார்' என உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்ன அமெரிக்க அதிபர் டிரம்ப் போல், 'நோபல் பரிசு வேண்டும்' என, அடமா பிடித்துக் கொண்டிருக்கிறார்?

ஜெ.மாரிமுத்து, ஈரோடு:

'தி.மு.க.,வை எதிர்த்து தான், அ.தி.மு.க., என்ற கட்சியையே எம்.ஜி.ஆர்., ஆரம்பித்தார். அத்தகைய கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முற்பட்டதால் தான், என்னுடைய எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தேன்...' என்கிறாரே, மரகதம் குமரவேல்?அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வே சொல்கிறார் என்றால், அதில் உண்மை இருக்கத்தானே செய்யும்!

க.அன்பு, கோவை:

தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தும் அநியாயம் நியாயமா?அவர்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளதே தற்போதைய அரசு... பார்ப்போம் கிடுக்கிப்பிடியால் பலன் ஏற்படுகிறதா என்று!

டி.ஜூலியட், கோவை:

'அரசியல் நாகரிகத்தின் உச்சம் கருணாநிதி' என்கிறாரே தி.மு.க., - ஆ.ராஜா?கருணாநிதி உச்சம் என்றால், அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம், வெறும் மிச்சமா ஜூலியட்?

வண்ணை கணேசன், சென்னை:

'என் தலைவனை தொட்டவன் யாராக இருந்தாலும் விட மாட்டோம்' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆவேசப்பட்டுள்ளாரே? மேயராக பதவியேற்ற புதிதில், 'ரெயின் வருது; அதனால் சாலைகளில் வாட்டர் நிக்குது' என பேசிய பிரியாவின் உண்மை முகமும், மொழியும் இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்குமே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு:

அமெரிக்காவில், முதுகலை, பிஎச்.டி., பட்டங்களைப் பெற்ற, நம் நாட்டின், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியர் தம்பதி, கல்விதான் தங்கள் வாழ்க்கையில் பல கதவுகளைத் திறந்தது; மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்துக்கு, 190 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்துள்ளனரே...அந்த இன்ஜினியர் தம்பதி, அப்படியே நம் நாட்டில் உள்ள தரமான பல்கலைக் கழகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உதவ முன்வரலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Barakat Ali
செப் 18, 2026 20:16

டிவிகே கூட திமுகவின் பி டீம்தான் ..... இன்னுமா புரியல ??


V.Mohan
செப் 18, 2026 14:23

மரகதம் குமரவேல், தான் அதிமுக வில் இருந்ததால் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகிவிட்டு தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றிவிட்டு தன் சுயலாபத்திற்காக தவெக விற்கு கட்சி மாறிவிட்டார். தேர்தல் கமிஷனுக்கு பயந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் சேர்ந்துள்ள கட்சி தலைவர் ஆட்சியை காப்பாற்ற, தீய சக்தி என்று திட்டிய திமுக கூட்டணியின் கட்சிகளின் காலைப் பிடித்து புது கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்ததில் தவறே இல்லை. நியாயமான செயல் அரசியலில் எதிர் துருவங்கள் கூட்டணி சேர்வது சகஜம் என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் இந்தம்மா சொல்வது என்ன ? அதிமுக, திமுக இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தாங்க. இந்த செய்தி ஆதாரபூர்வமானது இல்லை. இருந்தாலும் இந்தம்மா சொன்னது போல் நடந்திருந்தால் என்ன பெரிய இமாலய தவறு ?? இந்தம்மா அப்படியே வானத்திலிருந்து இறங்கிய தேவதையா.? தனக்கு தனி மெஜாரிட்டியும் இல்லை தேர்தலுக்காக கூட்டணியும் சேரவில்லை எனும் பட்சத்தில். திரு ஜோசப் விஜய் புதிய தேர்தலுக்கு வேண்டுகோள் வைத்திருந்தால் அவர் நியாயவாதி எனலாம். சற்றூம் சம்பந்தம் இல்லாத எதிரி தீய சக்தி திமுகவின் பல ஆண்டு கூட்டணியை உடைத்து துக்கடா கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஜோசப் விஜய் ஒன்றும் நியாயவாதியுமல்ல, மரகதம் குமரவேல் அப்படி ஒன்றும் அப்பா டக்கர் அரசியல் வாதியுமல்ல.


கனோஜ் ஆங்ரே
செப் 18, 2026 13:59

அதிமுக எம்.எல்.ஏ. சொன்னதை சரி என்றும், உண்மை என்றும் கூறும் அந்துமணியின் செயல்திட்டம் என்ன... என்பதை கவுண்டமணி கரகாட்டன் படத்தில் செந்திலை பார்த்து கேட்பது போல் உள்ளது


SUBRAMANIAN P
செப் 18, 2026 13:54

பதில்கள் அப்பசப்பைய இருக்கு.. இது எதுக்கு..?


Sathyanarayanan Sathyasekaren
செப் 18, 2026 13:19

சொந்த ஊரில் உள்ள பள்ளிகளுக்கு இந்த பணத்தை வைத்து பல நல்ல கட்டிடங்கள் சொந்தமாக கட்டி koduthu இருக்கலாம். இல்லை என்றால் ஒரு trust ஆரம்பத்து படிக்க வசதி இல்லாத ஏழைகளுக்கு உதவி இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பணம் அவர்கள் இஷ்டம்.


வில்லிபுத்தூரான்
செப் 18, 2026 17:25

இட ஒதுக்கீடும் அரசியல் தலையீடும் இங்கே பாடாய் படுத்துகிறது.


S.L.Narasimman
செப் 18, 2026 12:51

மற்ற எல்லா அதிமுக எம் எல் ஏக்களெல்லாம் அப்படி திமுகாவிடம் கூட்டணி பேசவில்ல என்கிறார்கள்.


GraceTA
செப் 18, 2026 10:03

திராவிட ஒன்று கூட வேண்டும் ஒரு தாய் கழகமாக மாறனும்


Kannan
செப் 18, 2026 09:43

அதிமுகவை எதிர்க்கிறது


Sun
செப் 18, 2026 09:01

அ.தி.மு.க எம்.எல்.ஏ சொன்னால் உண்மையா இருக்குமா? ஏன் அந்த எம்.எல்.ஏ அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடா?


raju
செப் 18, 2026 07:07

குறிஞ்சி மலரைப் போல அரிதான பதில் கடைசி கேள்விக்கு கிடைத்துள்ளது பாராட்டுகள்