உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமங்கலத்திற்கு தண்ணீர்

திருமங்கலத்திற்கு தண்ணீர்

சென்னை:சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க.,- உதயகுமார்: திருங்கலம் நகராட்சி, மதுரை மாநகராட்சிக்கு அருகில் உள்ளதால், அப்பகுதி விரிவடைந்து கொண்டே செல்கிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.அமைச்சர் நேரு: பெரியாறு அணையில் இருந்து, மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஐந்து டேங்க் கட்ட வேண்டும். அப்போது அருகில் இருக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sangarapandi
ஏப் 18, 2025 12:15

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பொது குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார், மிக்க நன்றி. ஆனால் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்ற விபரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டுகிறேன் .


முக்கிய வீடியோ