உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக இன்று (ஜூன் 12) முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 8 மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்பரித்து செல்கின்றனர். 92வது ஆண்டாக பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மாலை 12 ஆயரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.முன்னதாக மேட்டூர் அணையில், மதகுகள் சீரமைப்பு பணி, நெடுஞ்சாலை சார்பில் சாலையோரத்தில் வளர்ந்திருந்த புல்கள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூன் 12, 2025 19:11

இந்த முறை பூ வைத்திருந்த தட்டு தூக்கி போடவில்லையா?


vbs manian
ஜூன் 12, 2025 14:44

சமீபத்தில் வந்த ஏராளமான உபரி காவிரி நீர் கடலுக்குள். விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்.


ms muralidaran
ஜூன் 12, 2025 12:10

ஒரு அணையை அதிகாரி தொறந்தாலே போதும் முதலமைச்சர் தொறக்குற பழக்கம் தமிழ் நாட்டுல மட்டும் தான் இருக்கு


இறைவி
ஜூன் 12, 2025 12:09

காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், பின்னர் எழுபதுகளிலும் கூட மேட்டூர் அணை திறப்பது பொதுப்பணித்துறை முதன்மை அல்லது மேற்பார்வை பொறியாளர்தான். மாவட்ட ஆட்சியர் வருவார். இன்று ஒரு முதல்வர், அவருடன் ஒரு மந்திரி கூட்டம், இவர்களோடு ஒரு எடுபிடி கூட்டம் என்று ஒரு கும்பலே அணை திறக்க போகிறார்கள். தண்ட செலவு.


Minimole P C
ஜூன் 12, 2025 10:47

It is because of EVR, Cauvery flows through TN and lakhs of acres are irrigated.


பாரத புதல்வன்
ஜூன் 12, 2025 10:33

அணை நீரை திறப்பதில் உள்ள முனைப்பு ,அணைகளை தூர்வாருதல், புதிய அணை கட்டுதல் இவற்றில் காட்டிட வேண்டும். பேணா வுக்கு சிலை, போன்ற ஊதாரி செலவுகளை தவிர்த்து தண்ணீரை சேமிக்க திட்டமிட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை