உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தண்ணீரை, பணம் செலவழிப்பது போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும்'' என கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.கிராம சபை கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள். இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது. கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். 10 ஆயிரம் கிராமங்களை இணையம் மூலம் இணைத்து முதல் முறையாக கிராமசபை கூட்டம் நடக்கிறது. இந்தியாவில் எந்த முதல்வரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. முதல்வராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.

6 கிராம சபை கூட்டங்கள்

கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத் தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு. சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 தீர்மானங்கள்

கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவி குழு திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்த கட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பணத்தை தண்ணீராக செலவழிப்பதாக சொல்வார்கள். ஆனால் தண்ணீரை தான் பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

படிப்பு முக்கியம்

கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் அலட்சியம் கூடாது.ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை சரி செய்தால் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கலந்துரையாடல்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர், கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். உங்களுக்கு ஏதாவது வேணுமா? பிரச்னை ஏதாவது இருக்கா? என்ற கேள்விகளை மக்களிடம் ஸ்டாலின் எழுப்பி குறைகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Matt P
அக் 12, 2025 12:19

இந்தியாவில் எந்த முதல்வரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை.கருணாநிதி கூடவா?


Ramesh Sargam
அக் 12, 2025 01:28

இப்பெல்லாம் பணத்தை எங்கேப்பா பார்க்கமுடிகிறது. எல்லாம் G-Pay, Ru-Pay என்று எலெக்ட்ரானிக்ஸ் பரிவர்த்தனைதான்.


தாமரை மலர்கிறது
அக் 11, 2025 23:15

தண்ணீரை பணம் போல் செலவு செய்யணும்னு சொல்லிட்டு, நீங்கள் பணத்தை தண்ணீர் போன்று செலவிடுகிறீர்கள்.


D Natarajan
அக் 11, 2025 21:32

முற்றிலும் உண்மை. 53 கோடி வண்ண மீன் வியாபாரத்துக்கு . இதை நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு உபயோகப் படுத்தியிருந்தால் , எவ்வளவு நெல் சேமித்து இருக்கலாம். எத்தனை விவசாயிகள் பயன் படுத்தி இருப்பார்கள் .


sankaranarayanan
அக் 11, 2025 19:43

தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின் இவர் கூறுவது எந்த தண்ணீர் என்று விவரமாக கூறக்கூடாதா கிராமங்களில் மக்கள் இதைக்கேட்டு கொண்டாடுகிறார்கள்


Sundaran
அக் 11, 2025 18:54

இது மக்களுக்கு மட்டும் தான்.அமைச்சர்கள் ரூ.6 கோடி காரிலும் தனி விமானத்திலும் பறக்கலாம் . ரோடு ஷோ என்ற பெயரில் 100 கார்களுடன் வலம் வரலாம் .


வாய்மையே வெல்லும்
அக் 11, 2025 16:55

நெஞ்சிலே பளார் பளார் என ஓர் சமூகத்தினர் சில காரணங்களுக்காக மதரீதியாக ஒன்று கூடி தெருவோரங்களில் அடித்துக்கொள்வார்கள். நான் அதை வெளிநாட்டில் பார்த்து உள்ளேன். ரத்தம் சொட்டச்சொட்ட தன்னை காயப்படுத்தி கொள்வார்கள் அந்த மக்கள். எனக்கென்னவோ அதே மாதிரி நம்நாட்டு தமிழ்க்குடி மக்களும் ஒன்றுகூடி இந்த மாதிரி லாயக்கு இல்லாத ஆட்சி அதிகாரங்கள் கொடுத்த ஐந்து வருட அலங்கோல கொடுங்கோல் ஆட்சிக்காக நாமளும் வீதிக்கு வந்து நம்மையே சாட்டையில் அடித்துக்கொண்டால் தகும். மக்கள்வோட்டு போடும்போது செஞ்ச தப்பு க்கு நாமளே பொறுப்பு என சாட்டையடி வாங்கிகொள்ள தோணுது . அப்படியே பிரசுரிக்கவும் .. வயிறு எரிஞ்சு எழுதுகிறேன்


கௌதம்
அக் 11, 2025 16:40

அப்படீங்களா!!! உங்கள் வீட்டிலும், உங்கள் கட்சியினர் வீட்டிலும் உள்ள நீச்சல் குளங்களை எப்போது மூடுவீர்கள்?


senthilanandsankaran
அக் 11, 2025 16:09

தேர்தலுக்கு முன் ஒரு கிராம சபை நாடகம் போட்டார்.இப்பொழுது 4 வருடம் கழித்து மீண்டும் கிராம சபை நாடகம்...தேர்தலுக்குகாக...முழுக்க பணத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்ள ஒரு அச்சாரம் தான் இந்த கிராமசபை நாடகம்.


சிவகுமார்
அக் 11, 2025 15:24

இவர்கள் அரசு நிதியை எவ்வளவு கவனமாக செலவழிக்கிறார்களோ அது போன்று அல்ல. தண்ணீர் மற்றும் மின்சாரத்தை பொறுப்புடன் பார்த்து பார்த்து அவசியமானதற்கு மட்டும் செலவழிக்க வேண்டும். தமிழக மக்கள் செய்யத்தான் வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை