உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்க இப்பவும் கணவன், மனைவி தான்; ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு

நாங்க இப்பவும் கணவன், மனைவி தான்; ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தன்னை இனி யாரும் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.இந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி என தகவல் வெளியான நிலையில், பயணம் தொடர்பால் அவர் பெரும் களைப்பாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் விரைந்து குணம் பெற வேண்டி அறிக்கை விட்டுள்ள சாய்ரா பானு, இனி தன்னை யாரும் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இருவரும் கணவன், மனைவி பந்தத்தில் தான் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எந்தவகையிலும் அவருக்கு நான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. என்னை இனி யாரும் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும், அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

மனிதன்
மார் 17, 2025 03:10

இங்கே கருத்து போடுபவர்களின் லட்சணத்தை பாருங்கள்....இவர்களெல்லாம்தான் தூய எண்ணம் படைத்த நல்லவர்களாம்.. இவர்கள் எண்ணம் இப்படி இருந்தால் இவர்கள் சொல்லும் செயலும் எப்படி இருக்கும்? இவர்களெல்லாம் நியாயம் நீதி ன்று பேச என்ன அருகதை இருக்கிறது???


naranam
மார் 16, 2025 23:46

இதுதான் நாட்டின் இன்றைய முக்கியச் செய்தியா?


Venkataraman
மார் 16, 2025 23:04

வருமான வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்தற்காக இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். வருமான வரியில் உள்ள விதிவிலக்கு என்னவென்றால் விவாகரத்து செய்த மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் அந்த பணத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அவருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும் சொல்லி தன்னுடைய வருமானம் முழுவதையும் மனைவி பெயருக்கு மாற்றி விட்டார் ரகுமான். அதனால் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றார். ஆனால் இப்போதும் கணவனும் மனைவியும் இணைந்துதான் வாழ்கிறார்கள். வரி கட்டாமல் இருப்பதற்கு எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள். இதை மத்திய அரசு கவனித்து வரி ஏய்ப்பு நடக்காமல் இருக்க உரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்


Subramanian N
மார் 16, 2025 22:32

நீ விவாகரத்து பண்ணினா என்ன பண்ணலேனா எங்களுக்கு என்ன


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 16, 2025 21:56

ஆமாம், ஆமாம். பார்ட்டிக்கு உடம்பு சரியில்லை என்றவுடன், மிச்சம் இருக்கும் சொத்தில் எங்கே பங்கு கிடைக்காமல் போயிடுமோ என்ற பயம். அதான் நான் இன்னும் பொண்டாட்டிதான் என்ற அறிவிப்பு. நல்ல குடும்பம்.


kulandai kannan
மார் 16, 2025 21:46

மனைவிக்கு உடல் நலம் குறைந்ததால் விவாகரத்தா!! நல்ல மனித நேயம் சாமி.


Appa V
மார் 16, 2025 20:54

மார்க்கத்தில் ஹலாலா பண்ணாம எப்படி பிரிந்தவர் சேர்வது ?


Ramesh Sargam
மார் 16, 2025 20:31

நாங்க கேட்டோமா...? நீங்க எப்படியாவது இருந்திட்டு போங்க.


Shivam
மார் 16, 2025 21:07

உமக்கு வேற வேலையே இல்லையா


Shekar
மார் 16, 2025 20:30

வரி ஏய்ப்புக்கு நீங்கள் போட்டதுதான் விவாகரத்து நாடகம் என்று அப்பவே செய்தி வந்தது. என்ன இருந்தாலும் ஹிந்தி படத்துல சம்பாரிச்சுக்கிட்டு ஹிந்தி தெரியாது போடான்னு சொல்ற நல்ல நடிகர் உங்க வீட்டுக்காரர். உங்களுக்கெல்லாம் நடிக்க கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை


HoneyBee
மார் 16, 2025 20:14

என்னடா கர்மம் இது. எதுக்கு பாய் இந்த நாடகம் ஆடுகிறான்...


புதிய வீடியோ