உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயகத்துடன் கூடிய சட்டசபையை நடத்தினோம்

ஜனநாயகத்துடன் கூடிய சட்டசபையை நடத்தினோம்

சட்டசபை நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல், எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு, சபை நிகழ்ச்சிகளுக்கு குந்தகமாக இருந்தவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. சபையில் அதிகம் கத்திப் பேசியவர் அவர்தான். ஆனால், சபையில் நாயகராக இருந்து எல்லாவற்றையும் எதிர்கொண்ட எங்கள் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், நடப்பவை அனைத்தையும் அமைதியாக பார்த்தார். சபையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் கொஞ்சம் கூட சுணக்கம் இன்றி பதிலளித்தார்.அதேபோலவே, அனைத்து துறை அமைச்சர்களும் எதிர் தரப்பில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தனர். மொத்தத்தில், ஜனநாயகத்துடன் கூடிய சிறப்பான சபையை தி.மு.க., வழிநடத்தியது.ஐம்புலன்களையும் அடக்கி, நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதற்கெல்லாம் ஒரு தகுதியும் திறமையும் வேண்டும். முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, தன்னை தானே பாரட்டிக் கொள்பவர் என கூறியுள்ளார். அவர், ஆதங்கத்தில் கருத்து மழை பொழிந்துள்ளார். முதல்வர் ஏற்பாட்டில் அவருக்கு பாராட்டு விழா நடக்கவில்லை. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, தமிழகத்தில் உள்ள பல்கலைகள். அது தி.மு.க., நிகழ்ச்சி அல்ல.- சேகர்பாபு, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை