உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மாறி வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப கற்றுக்கொண்டே இருக்கணும்

 மாறி வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப கற்றுக்கொண்டே இருக்கணும்

'ஜோ ஹோ' நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி பேசியதாவது: தற்போது, கல்லுாரிகளில் உள்ள படிப்புகளின் வாயிலாக, மாணவர்களின் வாழ்க்கைக்கு என்ன பயன் என்ற கேள்வியும், பயமும் எழுகிறது. கல்வி நிலையங்களில், மாணவர்களை முத்துக்கள் போல் பட்டை தீட்டுகிறோம் எனக்கூறி, தங்களுக்கு தெரிந்த அனைத்தையும் மாணவர்கள் மீது திணித்து அவர்களின் ஆசையை மாற்றி விடுகின்றனர். அப்படி இல்லாமல், அவர்களின் ஆசையை அறிந்து, அவர்களுக்குள் இருக்கும் திறமையை மேலும் வளர்க்க வேண்டும். அதுவே இனி வரும் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கல்வி முறை. பொருட்களுக்கு என கால அளவு உள்ளது போல, நீங்கள் படித்து வாங்கும் டிகிரிக்கும் கால அளவு உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை டெக்னாலஜி மாறிக்கொண்டே வருகிறது. படித்து முடித்து விட்டோம். அதை வைத்து, வாழ்க்கையை நகர்த்தலாம் என்ற காலம் முடிந்து விட்டது. வாழ்க்கை முழுதும் நீங்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். 'ஆசிரியரிடமிருந்து கால் பகுதி; தன் முயற்சியினால் கால் பகுதி; சக நண்பர்களிடமிருந்து கால் பகுதி; அனுபவத்தின் வாயிலாக மீதி கால் பகுதியும் வரும்' என, சமஸ்கிருத சுலோகம் கூறுகிறது. இந்த முறையை கடைப்பிடிப்போர் வாழ்வில் நிச்சயம் சாதிப்பர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை