வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உருப்படாத சட்டங்களை வெச்சு எல்லாத்திலிருந்தும் தப்பிச்சுடலாம்.
சென்னை: ரெய்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: ஆரணி தொகுதி சட்டசபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டசபை உறுப்பினரையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vuzsf4ed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டாஸ்மாக் வழக்கில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க.,வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைகதைகளால்,போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுகவினரை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.வெல்வோம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
உருப்படாத சட்டங்களை வெச்சு எல்லாத்திலிருந்தும் தப்பிச்சுடலாம்.