உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்: சொல்கிறார் விஜய்

யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்: சொல்கிறார் விஜய்

சென்னை: 'நின்று நிதானித்து நேர்மையோடு நடைபோடுவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்' என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில், கட்சிக்கொடியை விஜய் ஏற்றி வைத்தார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இன்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இது குறித்து தொண்டர்களுக்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sqhsaqtq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில் தான், கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்னைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது, மக்களரசியல் மட்டுமே. தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான், நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வரும் 2026ம் ஆண்டு தேர்தல். இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும், உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன். மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான். தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே, இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026ம் ஆண்டு தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர். தோழர்களே, தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

சிலைகள் திறப்பு

த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில், வேலுநாச்சியார், காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், அஞ்சலையம்மாள் சிலைகளைச் சிறந்து வைத்து விஜய் மரியாதை செலுத்தினார். அவர் கட்சியை கொடியை ஏற்றி வைத்தார். கட்சி கொடியேற்றிய பிறகு விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன். மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும் தலைவர்களான ஈ.வெ.ரா, அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.வெற்றி நிச்சயம்! இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Bhaskaran
பிப் 03, 2025 20:37

ஆனானப்பட்ட சிவாஜியே திருவையாறில் கட்டுத்தொகை பறி கொடுத்து தோற்றுப்போனார் t திராவிடம் இவray எல்லாம் விழுங்கி ஜீரணிக்கும்


Balasubramanian
பிப் 03, 2025 05:33

யானைகள் என்றுமே வெஜிடேரியன் தான்! அவரவர்கள் பொங்கல் பண்டிகையை பிரியாணி பண்டிகையாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்! பலம் எப்படி வரும்? சீக்கிரம் குவாட்டர் பிரியாணி துட்டு ஓட்டுக்கு துட்டு என்று புலி மாதிரி பாய வேண்டும்! அப்போது தான் தமிழக அரசியலில் தாக்கு பிடிக்க முடியும்


S. Neelakanta Pillai
பிப் 03, 2025 04:16

அதை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி இவரிடம் இல்லை.


ராமகிருஷ்ணன்
பிப் 03, 2025 02:38

ஒரு தேர்தலை பார்க்கும் வரை எல்லா டகால்டி வேலையெல்லாம் காமி ராசா. அதுக்கப்புறம் மையம் போன இடத்திற்கு போயிடலாம்.


Rajan A
பிப் 02, 2025 20:29

அம்பேத்கரையும் மற்றவரையும் சரிசமமாகஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சட்ட மேதை எங்கே, தடி எங்கே.


முருகன்
பிப் 02, 2025 20:27

அடுத்த கட்சி ஆட்கள் தான் அந்த யானைகள் உங்களுக்காக உழைத்த ரசிகர்கள் இல்லை


Karthikeyan Palanisamy
பிப் 02, 2025 19:53

உங்க எதிரி யாருங்க...


Oviya Vijay
பிப் 02, 2025 19:28

திமுக தான் 2026 தேர்தல்ல கூட அவங்க தான் வரப்போறாங்க... பாஜக தமிழ்நாட்டுல வர்றதுக்கு வாய்ப்பே இல்லை...


M Ramachandran
பிப் 02, 2025 19:18

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை உங்கள் காட்டில் மழை தான். ஆனந்தம் பேரானந்தம் தான். ஸ்டாலின் பணம் கொடுத்து ஆரம்பித்த கட்சி??? ஆங்கிலெயரின் அடி வாரிசு தீ முக்கவின் வால் இந்த ஜோசப் விஜய்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 02, 2025 19:14

எல்லா கட்சிகளில் இருந்தும் 2 சதவிகிதம் வாக்குகளை தவெக பிடுங்கிக் கொள்ளப் போவது நிஜம். இதுவே ஒரு 10 முதல் 12 சதவிகிதம் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை