உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம்; சீமான் திட்டவட்டம்

ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம்; சீமான் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது;கனடா நாடு ஜனவரி மாதத்தை தமிழர் கலாசாரம் மாதம் என்று அறிவிக்கின்றது. தமிழர்களுக்கான பண்டிகை நாளன்று தேர்வு வைத்தால் எங்களுக்கு தேசப்பற்று வருமா? தேசவெறுப்பு வருமா? புதியக் கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலப் பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் ஏற்கப்படாது.புதியக் கல்விக் கொள்கை, ஒரே நாடு, ஒரே தேர்தல் இது எல்லாம் தேவையில்லாத திணிப்பு. உலகத்தில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தென் கொரியா. அங்கு எட்டு வயதில்தான் குழந்தைகள் 1ம் வகுப்பு சேர்க்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் தனக்கான உடையை அவனை உடுத்திக் கொள்ளும் வகையிலும், அவனது உணவை தானே எடுத்து உண்ணும் அளவிற்கு வளரும் வரை அவன் விருப்பப்படியே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். அங்கு எட்டு வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் சேர்க்கும்போது, இங்கு அப்பொழுது பொது தேர்வு எழுத சொல்கிறார்கள். நான் இருக்கும் வரை நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த திட்டமும் கொண்டு வர முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஜன 08, 2025 16:16

போட்டியிடுவோம் என்று தான் சொல்லியுள்ளார், வெற்றி பெறுவோம் என்று சொல்லவில்லை. பாவம் அவருக்கே நம்பிக்கை இல்லை!


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:40

பல லட்சுமிகளை தீம்க்கா சைமனுக்கு எதிராக களமிறக்கும்...


D.Ambujavalli
ஜன 08, 2025 06:35

இளங்கோவன் குடும்பத்தில் இன்னும் மீதி இருக்கும் உறுப்பினரெல்லாம் போட்டி போடா வேண்டாமா? அவரின் மருமகள், இன்னும் எத்தனைபேர் இருப்பார்கள்?


சம்பா
ஜன 08, 2025 02:17

ஒரு குடும்பம்மெட்டையடிக்க படுது உன்னால அவன் சொத்த தீர்த்து கட்டு


Kundalakesi
ஜன 08, 2025 01:40

3-6% பிரித்தாலே நல்ல பங்கு வருமே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 07, 2025 23:13

திமுக,நாதக வுக்கு கொடுத்த டாஸ்கே இதுதான்....அனைத்து தேர்தலிலும் திமுகவை எதிர்த்து போட்டி இடவேண்டும், திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிக்க வேண்டும்....அதை கரைட்டா செய்கிறார்....அப்பதான் திரள் நிதி கரைட்டா கிடைக்கும்....!!!


Ramesh Sargam
ஜன 07, 2025 22:03

போட்டியிடுவீர்கள். ஆனால் வெற்றிபெறுவீர்களா?


Dhurvesh
ஜன 07, 2025 21:07

கவலைப்பதே உனக்கு பிஜேபி யில் இருந்து CUTTING வந்திடும் , ஏதோ ஒரு அப்பாவிக்கு சீட் கொடுத்து அவர் கிட்ட இருந்தும் பணம் கறப்பீங்க டபுள் சைடு EFFECT என்ஜோய்


Duruvesan
ஜன 07, 2025 20:51

பிஜேபி அதிமுக விஜய் எல்லோரும் ஆதரிக்க வேண்டும், தனியா நின்னா யாரும் டெபாசிட் வாங்க மாட்டீங்க


arumugam
ஜன 07, 2025 20:36

யாருக்கும் வருத்தம் இல்லை. ஓரு ஒரமா நின்னு போட்டி போட்டு சிதறு தேங்காய் ஓட்டை எடுத்துக்கோங்க ...