மேலும் செய்திகள்
காங்கிரஸ் ராகுலுக்கு தி.மு.க., பகிரங்க கேள்வி
07-Oct-2026
சென்னை: ‘எஸ்.ஐ.ஆர்., முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்து கொண்டிருக்கும் நேரத்தில், தி.மு.க., கள்ள மவுனம் காக்கிறது’ என, பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். அவரது அறிக்கை: மாநில உரிமைகள் என்றால் டில்லியில் பதுங்குவது, தமிழகத்தில் பாய்வது; எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது மற்றொரு பேச்சு. கடந்த 70 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் தி.மு.க., இப்படித்தான், காலம் காலமாக அரசியல் ‘டிராமா’க்கள் நடத்துகிறது. எஸ்.ஐ.ஆர்.எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து நாடே கொந்தளித்து கொண்டிருக்கும் நேரத்தில், தி.மு.க., கள்ள மவுனம் காக்கிறது. எஸ்.ஐ.ஆர்., பணிகள் தமிழகத்தில் நடந்த காலம் முழுதும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் முதல்வராக இருந்தார். ஆரம்பத்தில் எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதுபோல காட்டிய தி.மு.க., மெல்ல மெல்ல தேர்தல் கமிஷனோடும், பா.ஜ.,வுடனும் கூட்டணி அமைத்தது. தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் முழுமையாக எஸ்.ஐ.ஆரை அமல்படுத்தியது தி.மு.க.,தான். இதை ஸ்டாலினால், மறுக்க முடியுமா? ஆனால், பீஹாரில் எஸ்.ஐ.ஆர்., அறிவிப்பு வந்தபோதே, அதை த.வெ.க., கடுமையாக எதிர்த்தது. எஸ்.ஐ.ஆர்., பணிகளை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எஸ்.ஐ.ஆர்., என்ற தனித்துவமான ஜனநாயகத்தை படுகொலை செய்த பழியில் பங்கேற்று விட்டு, இப்போது முதலை கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். எஸ்.ஐ.ஆர்., பணிகளில் தி.மு.க., செய்த சதிகளை, முழு ஆதாரங்களுடன் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வைக்க திட்டம்எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்டிக்கும் வகையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி, கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இதே வழியில், தமிழகத்தில் த.வெ.க., அமைச்சரவையில் உள்ள காங்கிரசுக்கு நெருக்கடி தர தி.மு.க., திட்டமிட்டுள்ளது.தமிழக சட்டசபையிலும், ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என, த.வெ.க., அரசை வலியுறுத்துவதே தி.மு.க.,வின் திட்டம். அப்படி செய்தால், தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற, த.வெ.க., அரசுக்கு காங்., அழுத்தம் தருமா அல்லது மவுனம் சாதிக்குமா என அறிய, தி.மு.க., விரும்புகிறது.சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டாவிட்டால், தனிநபர் தீர்மானம் கொண்டு வருவது குறித்தும், தி.மு.க., மூத்த நிர்வாகிகளிடம், கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
07-Oct-2026